ADVERTISEMENT

ஜனவரி முதல் அமலுக்கு வரும் அபுதாபி டோல் கேட்..!! வாகன உரிமையாளர்கள் டோல் கேட்டிற்கான அக்கவுண்ட்டை பதிவு செய்து செயல்படுத்த App அறிமுகம்..!!

Published: 8 Dec 2020, 11:21 AM |
Updated: 8 Dec 2020, 11:32 AM |
Posted By: admin

அபுதாபியில் இருக்கக்கூடிய நான்கு முக்கிய பாலங்களான ஷேக் சையத் பிரிட்ஜ், மக்தா பிரிட்ஜ், ஷேக் கலீபா பிரிட்ஜ் மற்றும் முசாஃபா பிரிட்ஜ் ஆகிய நான்கு பிரிட்ஜ்களிலும் டோல் கேட் அமைக்கப்பட்டு விரைவில் செயல்பாட்டுக்கு வரும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. பின்னர் இந்த ஆண்டு முழுவதும் டோல் கேட் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்படாமல் அடுத்த வருடம் முதலே செயல்பாட்டுக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ADVERTISEMENT

அதன்படி, அபுதாபியில் இந்த நான்கு பிரிட்ஜ்களிலும் அமைக்கப்பட்டிருக்கும் டோல் கேட் வரும் ஜனவரி 2-ம் தேதி முதல் செயல்பாட்டுக்கு வரும் என்று தற்பொழுது அறிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் ஒரு மாதத்திற்கும் குறைவான நாட்களே இருப்பதால் அபுதாபியில் உள்ள அதிகாரிகள் வாகன உரிமையாளர்களை ‘Darb’ டோல் கேட் முறைக்கு பதிவு செய்யுமாறு அழைப்பு விடுத்துள்ளனர். இதனை https://darb.itc.gov.ae என்ற இணையதளம் வழியாகவோ அல்லது Darb அப்ளிகேஷன் வழியாகவோ சென்று வாகன உரிமையாளர்கள் தங்களுக்கான டோல் கேட் அக்கவுண்டை ரிஜிஸ்டர் செய்து ஆக்டிவேட் செய்து கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளனர்.

மேலும், “Peak Time” என்று சொல்லக்கூடிய போக்குவரத்து நெரிசல் அதிகமுள்ள நேரங்களான காலை 7 மணி முதல் 9 மணி வரை மற்றும் மாலை 5 மணி முதல் 7 மணி வரை ஆகிய நேரங்களில் மட்டுமே இந்த டோல் கேட்களில் இருந்து கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நேரங்களில் ஒவ்வொரு முறை டோல் கேட்டை கடக்கும் போதும் 4 திர்ஹம்ஸ் கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. அத்துடன் வெள்ளிக்கிழமை மற்றும் பொது விடுமுறை நாட்களில் டோல் கேட் கட்டணம் வசூலிக்கப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

போக்குவரத்து ஓட்டத்தை மேம்படுத்துவதற்காகவும், மாற்று மாற்று போக்குவரத்து வழிகளைப் பயன்படுத்துவதை ஊக்குவிப்பதற்காகவும் இந்த செயல்முறை நடைமுறைக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT