ADVERTISEMENT

துபாயில் இனி இந்த குறிப்பிட்ட சில மையங்களில் PCR டெஸ்ட் எடுக்கப்படாது என DHA அறிவிப்பு..!!

Published: 19 Jan 2021, 1:28 PM |
Updated: 19 Jan 2021, 1:31 PM |
Posted By: admin

துபாயில் கொரோனாவிற்காக எடுக்கப்படும் PCR சோதனைக்காக அமைப்பட்டிருக்கும் மையங்களில், ஒரு சில மையங்கள் இனி கோவிட் -19 PCR சோதனைகள் மேற்கொள்ளாது என துபாய் சுகாதார ஆணையம் அறிவித்துள்ளது. மேலும், DHA அறிவித்திருக்கும் இந்த குறிப்பிட்ட சோதனை மையங்களில் இன்று (ஜனவரி 19) முதல் PCR சோதனை மேற்கொள்ளப்பட மாட்டாது என்றும் கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

அத்துடன் துபாயில் அப்பாயிண்ட்மெண்ட் மூலம் மற்றும் அப்பாயிண்ட்மெண்ட் இல்லாமல் நேரடியாகவே சென்று PCR சோதனை மேற்கொள்ளப்படும் சோதனை மையங்களையும் DHA தெரிவித்துள்ளது.

PCR சோதனை சேவைகள் நிறுத்தப்படும் மையங்கள்

  •  துபாய் மால்
  • அல் நக்கீல் மால்
  • மிர்திஃப் சிட்டி சென்டர்
  • அல் ஹம்ரியா போர்ட் மஜ்லிஸ்
  • அல் ஷபாப் அல் அஹ்லி கிளப்

அப்பாயிண்ட்மெண்ட் மூலம் PCR சோதனை மேற்கொள்ளப்படும் மையங்கள்

  • அல் ரஷீதியா மஜ்லிஸ்
  • ஜுமேரா 1 போர்ட் மஜ்லிஸ்
  • அல் நாஸ்ர் கிளப்.

அப்பாயிண்ட்மெண்ட் தேவையின்றி நேரடியாகவே சென்று PCR சோதனை மேற்கொள்ளப்படும் மையங்கள்

  • தேரா சிட்டி சென்டர்
  • மால் ஆஃப் தி எமிரேட்ஸ்