துபாய் வரும் பயணிகளுக்கான PCR சோதனை விதிமுறைகளில் மாற்றம்..!! ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் அறிவிப்பு..!!

இந்தியாவின் பட்ஜெட் விமான நிறுவனமான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸில் இந்தியாவில் இருந்து துபாய்க்கு பயணிக்கும் நபர்கள் இனி கொரோனாவிற்கான PCR சோதனைகள் குறித்த திருத்தப்பட்ட விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டியிருக்கும் என்று விமான நிறுவனம் தற்பொழுது வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இது குறித்து விமான நிறுவனம் தெரிவிக்கையில், “துபாய் சுகாதார ஆணையம் (DHA) வழங்கிய ஆலோசனையின்படி, பயணிகள் சமர்ப்பித்த கோவிட் -19 பிசிஆர் சோதனை அறிக்கையின் நகலில் சோதனை அறிக்கையுடன் QR குறியீடு இருக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளது.

மேலும் PCR சோதனையின் முடிவைப் பெறும் தேதி மற்றும் நேரம் உட்பட சோதனைக்கான மாதிரி சேகரிப்பு மற்றும் அறிக்கையிடலின் தேதி மற்றும் நேரம் இனி துல்லியமாக குறிப்பிடப்பட வேண்டும் என்றும் விமான நிறுவனம் அறிவித்துள்ளது.