இனி துபாய் திரும்பும் குடியிருப்பாளர்கள் GDRFA ஒப்புதல் பெற தேவையில்லை..!! எமிரேட்ஸ் நிறுவனம் தகவல்..!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த வருடம் கொரோனா பாதிப்பையொட்டி சர்வதேச விமானப் போக்குவரத்து தடை செய்யப்பட்டு மீண்டும் விமானப் போக்குவரத்து துவங்கப்பட்டாலும் அமீரகத்திற்கு திரும்பவிருக்கும் குடியிருப்பாளர்கள் ICA வின் ஒப்புதல் பெற்றிருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டது. மேலும் துபாய் குடியிருப்பாளர்கள் GDRFA வின் ஒப்புதல் பெற்றிருக்க வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி, பயணிகள் அமீரகத்திற்கு திரும்பி வரும் நிலையில் துபாய் ரெசிடென்ஸ் விசா வைத்திருந்து, துபாய்க்கு திரும்பும் குடியிருப்பாளர்கள் இனி வதிவிட மற்றும் வெளிநாட்டினர் விவகாரங்களுக்கான பொது இயக்குநரகத்தின் (GDRFA) ஒப்புதல் பெற தேவையில்லை என்று எமிரேட்ஸ் விமான சேவை கால் சென்டர் நிர்வாகி தெரிவித்துள்ளார்.

துபாய்க்கு திரும்பும் குடியிருப்பாளருக்கு விமான நிறுவனத்திடம் இருந்து வந்த ஈமெயிலில் துபாய் குடியிருப்பு விசா வைத்திருப்பவர்களுக்கு GDRFA ஒப்புதல் தேவையில்லை என குறிப்பிடப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

இந்த நடைமுறையானது பிப்ரவரி 12 ம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக துபாய்க்கு திரும்பும் அனைவருக்கும் GDRFA ஒப்புதல் தேவைப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து எமிரேட்ஸ் நிறுவனத்தின் கால் சென்டர் நிர்வாகி கூறுகையில், ​​துபாய் குடியிருப்பாளர்கள் துபாய்க்கு திரும்புவதற்கான ஒரே தேவை, புறப்படுவதற்கு 72 மணி நேரத்திற்குள் மேற்கொள்ளப்பட்ட கொரோனா PCR சோதனைக்கான எதிர்மறை சான்றிதழ் என்று கூறியுள்ளார்.

 

 

News Source : Khaleej Times