ADVERTISEMENT

செவ்வாய் கிரகத்தின் முதல் புகைப்படத்தை வெளியிட்ட ஹோப் ப்ரோப்..!! சமூக ஊடகங்களில் பகிர்ந்த அமீரக தலைவர்கள்..!!

Published: 14 Feb 2021, 12:53 PM |
Updated: 14 Feb 2021, 12:55 PM |
Posted By: admin

ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து கடந்த வருடம் விண்வெளிக்கு அனுப்பப்பட்ட ஹோப் ப்ரோப் விண்கலம் முதன் முதலாக செவ்வாய் கிரகத்தில் எடுத்த செவ்வாய் கிரகத்தின் கண்கவர் படத்தை வெளியிட்டுள்ளது. விண்கலம் எடுத்துள்ள இந்த புகைப்படத்தை அமீரகத்தின் தலைவர்கள் தங்களது சமூக ஊடக பக்கங்களில் பகிர்ந்துள்ளனர்.

ADVERTISEMENT

ஐக்கிய அரபு அமீரகத்தின் துணைத் தலைவரும் பிரதமரும் துபாயின் ஆட்சியாளருமான மாண்புமிகு ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அவர்கள் வெளியிட்ட டீவீட்டில், “செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பப்பட்ட அரபு உலகின் முதல் விண்கலமான ஹோப் ப்ரோப் செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் இருந்து 25,000 கி.மீ உயரத்தில் எடுத்த முதல் படம்” என்று பதிவிட்டுள்ளார்.


அபுதாபியின் மகுட இளவரசரும், ஐக்கிய அரபு அமீரக ஆயுதப்படைகளின் துணை உச்ச தளபதியுமான ஷேக் முஹம்மது பின் சயீத் அல் நஹ்யான் அவர்கள் வெளியிட்ட டீவீட்டில், “ஹோப் ப்ரோப் செவ்வாய் கிரகத்தின் முதல் படத்தை வெளியிட்டிருப்பது நமது வரலாற்றில் ஒரு மிக முக்கிய தருணம் மற்றும் இந்நிகழ்வானது விண்வெளி ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள நாடுகளில் ஒன்றாக ஐக்கிய அரபு அமீரகம் முன்னேறியுள்ளதைக் காட்டுகிறது” என்று தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

மேலும், “இந்த பணி செவ்வாய் கிரகத்தைப் பற்றிய புதிய கண்டுபிடிப்புகளுக்கு வழிவகுக்கும், இது மனிதகுலத்திற்கு பயனளிக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்” என்றும் கூறியுள்ளார்.

ADVERTISEMENT

இந்த விண்கலம் கடந்த வாரம் செவ்வாய் கிரகத்தின் சுற்றுப்பாதையில் நுழைந்தது. இந்த விண்கலமானது ஏப்ரல் 2023 வரை 1TB க்கும் அதிகமான புதிய தரவை பிடிப்பதை முக்கிய நோக்கமாக இருக்கும் என்றும் இதன் கண்டுபிடிப்புகள் உலகெங்கிலும் உள்ள 200 அறிவியல் மற்றும் கல்வி நிறுவனங்களுடன் இலவசமாக பகிரப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.