ஓமான்: 157 வெளிநாட்டவர்களுக்கு ஓமானி குடியுரிமையை அறிவித்த சுல்தான்..!! விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள் என்னென்ன.??

ஓமான் நாட்டின் சுல்தான் மாண்புமிகு ஹைதம் பின் தாரிக் அவர்கள் ஓமான் நாட்டில் வசிக்கும் 157 வெளிநாட்டவர்களுக்கு ஓமானி குடியுரிமை வழங்கும் ராயல் ஆணையை வெளியிட்டுள்ளார். இதற்கு முன்னதாக கடந்த ஆண்டு டிசம்பரில், 32 வெளிநாட்டினருக்கான ஓமானி குடியுரிமையை சுல்தான் மாண்புமிகு ஹைதம் பின் தாரிக் அவர்கள் வழங்கியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

ஓமானி குடியுரிமையைப் பெறவும், ஓமானி பாஸ்போர்ட்டைப் பெறவும் விரும்பும் வெளிநாட்டவர்கள் அதற்கான விண்ணப்பத்தை தாக்கல் செய்ய OMR600 கட்டணமாக செலுத்த வேண்டும். அதே நேரத்தில் ஓமானி குடிமக்களின் வாழ்க்கைத் துணைவர்கள் அல்லது முந்தைய வாழ்க்கைத் துணைவர்கள் குடியுரிமை பெறுவதற்கான விண்ணப்பத்தை தாக்கல் செய்ய OMR300 செலுத்த வேண்டும் என்றும் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும் விண்ணப்பதாரர்கள் தாங்கள் ஓமானில் வசிக்கிறோம், வேலை செய்கிறோம் என்பதையும், அவர்கள் மீது எந்தவொரு சட்ட வழக்குகளும் ஓமான் காவல்துறையால் பதிவுசெய்யப்படவில்லை என்பதையும் நிரூபிக்க வேண்டும். அத்துடன் தங்களுக்கு தொற்று நோய்கள் இல்லை என்பதை நிரூபிக்க மருத்துவ சான்றிதழை வழங்க வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஓமானி குடியுரிமை பெற தேவையான ஆவணங்கள்…

அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட நிறைவேற்று ஒழுங்குமுறை 92/2019 கூறுவதாவது, “வெளிநாட்டவருக்கான ஓமானி குடியுரிமை பெற விண்ணப்பத்திற்கு OMR600 செலவாகும், அதே சமயம் ஒரு ஓமானி குடிமகனின் வெளிநாட்டு மனைவி, கணவனை இழந்தவர்கள் அல்லது விவாகரத்து பெற்றவருக்கான விண்ணப்பத்திற்கும், அதேபோல் ஒரு ஓமானி பெண்ணின் குறிப்பிட்ட வயதுக்குட்பட்ட குழந்தைக்கு குடியுரிமை பெற விண்ணப்பத்திற்கும் OMR300 செலவாகும். குடியுரிமை பெற விண்ணப்பிப்பவர்கள் தங்களின் ஓமானிய குடியுரிமையை விட்டுக்கொடுக்க அல்லது திரும்பப் பெற விண்ணப்பிக்க சட்டத்தின் படி OMR200 செலவாகும் எனவும் அமைச்சகத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஓமானி குடியுரிமைக்கு விண்ணப்பிக்கும் வெளிநாட்டவரின் விண்ணப்பங்களை பரிசீலிக்க பல அளவுகோல்களை பூர்த்தி செய்ய வேண்டும், மேலும் அவர்கள் கீழ்காணும் 12 ஆவணங்களை முன்வைக்க வேண்டும்.

– செல்லுபடியாகும் விசாவுடன் பாஸ்போர்ட்டின் நகல்

– தனிப்பட்ட அடையாள அட்டையின் நகல் அல்லது அதற்கு சமமான அடையாளம்

– செல்லுபடியாகும் வதிவிட (Resident) அட்டையின் நகல்

– திருமணமானால் அவரின் திருமண சான்றிதழின் நகல்

– திருமணமானவரின் மனைவி மற்றும் குழந்தைகளின் பாஸ்போர்ட் நகல்கள்

– ஒரு ஓமானிய பெண்ணை மணந்திருந்தால், அந்த வெளிநாட்டவரின் திருமணத்திற்கான அவரது சான்றிதழ்

– ஓமானில் இருந்து நல்ல நடத்தைக்கான சான்றிதழ் மற்றும் அவர் சேர்ந்த நாட்டிலிருந்தும் நல்ல நடத்தைக்கான சான்றிதழ்

– அவர் உடல் தகுதியுள்ளவர் (Fit) மற்றும் பரவும் நோய்களால் (Transmittable diseases) பாதிக்கப்படாதவர் என்பதை நிரூபிக்கும் சரியான மருத்துவ சான்றிதழ் பரவும் நோய்கள்

– அவரது முதலாளியிடமிருந்து வருமான ஆவணம்

– அவரது ஒரிஜினல் பாஸ்போர்ட்டை பறிமுதல் செய்ய அனுமதிக்கப்படுகிறார் என்பதை நிரூபிக்கும் அவரது நாட்டின் தூதரகத்திலிருந்து ஒரு சான்றிதழ்

– அவரது தற்போதைய பாஸ்போர்ட்டை பறிமுதல் செய்வதற்கான நோக்கத்திற்கான எழுத்துப்பூர்வ சான்று

– அமைச்சகத்திற்கு ஒரு எழுத்துப்பூர்வ அறிவிப்பு, அதில் அவரது வயதுக்குட்பட்ட குழந்தைகள் அனைவரின் பெயர்களும் அவர்களின் ஆவணங்களும் அடங்கும்

ஓமானிய குடியுரிமையைப் பெறும் எவரும் ஓமானி பாஸ்போர்ட்டைப் பெற உள்துறை அமைச்சகத்தை தொடர்புகொள்ள வேண்டும், மேலும் அவர்கள் ஓமானில் நீண்டகாலமாக வசிப்பவராக இருக்க வேண்டும். ஓமானி குடியுரிமை பெற்றவரின் குறைந்த வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ஆறு மாதத்திற்குள்ளாகவே குடியுரிமை வழங்கப்படும்.

இந்த நடைமுறையைத் தொடங்கும் வெளிநாட்டவர்கள் அரபு மொழித் தேர்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும். அது அமைச்சகத்திலேயே நடைபெறும் ஒரு எழுத்து பரீட்சையாகவோ அல்லது அது அரபி மொழியில் ஒரு நேர்காணலாக இருக்கலாம். இந்த தேர்வில் தோல்வியுற்ற வெளிநாட்டவர்கள் ஆறு மாதங்கள் கடந்துவிட்டால் குடியுரிமை பெற மீண்டும் விண்ணப்பிக்கலாம், இருப்பினும் அதை மீண்டும் மீண்டும் செய்ய நான்கு வாய்ப்புகள் மட்டுமே வழங்கப்படும்.

உள்துறை அமைச்சகத்திடம் அனுமதி பெறாவிட்டால், ஓமானின் புதிய குடிமக்கள் குடியுரிமை பெற்ற பத்து ஆண்டுகளில் ஒரே நேரத்தில் ஆறு மாதங்கள் நாட்டிற்கு வெளியே செலவிட முடியாது என்பதும் குறிப்பிடத்தக்கது.