அமீரக செய்திகள்

UAE: வார இறுதி நாட்களில் அதிக மழை பெய்ய வாய்ப்பு..!! தேசிய வானிலை ஆய்வு மையம் தகவல்..!!

ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் கடந்த சில வாரங்களாக பெரும்பாலான இடங்களில் அதிகளவிலான பனிப்பொழிவு காணப்பட்ட நிலையில் இன்று அபுதாபி மற்றும் துபாயின் சில பகுதிகளில் மழை பெய்ததாக தேசிய வானிலை ஆய்வு மையம் (National Centre of Meteorology – NCM) அறிவித்துள்ளது. மேலும் இன்றைய நாள் முழுவதும் ஐக்கிய அரபு அமீரகத்தில் மேகமூட்டமான சூழ்நிலை நீடித்ததாகவும் அது தெரிவித்துள்ளது.

இது குறித்து தேசிய வானிலை ஆய்வு மையம் தனது சமூக ஊடக பக்கத்தில் வெளியிட்டிருந்த ட்வீட்டில் துபாயின் ஜெபல் அலிc(Jebel Ali) மற்றும் அபுதாபியின் அல் தஃப்ரா (Al Dhafra) பகுதிக்குட்பட்ட அல் சிலா (Al Sila), சப்காட் மாட்டி (Sabkhat Matti) மற்றும் ஜெபல் தன்னா (Jebel Dhanna) ஆகிய பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை மழை பெய்ததாக தெரிவித்துள்ளது. மேலும் அமீரகத்தில் மழை பொழிவிற்காக “கிளவுட் சீடிங்” (Cloud Seeding) முறை பயன்படுத்தப்பட்டதாகவும் வரும்நாட்களில் அதிக மழை பெய்யும் என்றும் தேசிய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அதன்படி, வரும் செவ்வாய், புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் அதிக மழை பெய்யும் என்று NCM கணித்துள்ளது.

இதே போன்று நேற்று சனிக்கிழமையும் டிப்பா (Dibba), புஜைரா (Fujairah) மற்றும் அபுதாபியின் சில பகுதிகளிலும், துபாய், ஷார்ஜா மற்றும் அஜ்மான் ஆகிய இடங்களிலும் மழை பெய்ததாக அமீரகத்தின் புயல் மையம் (Storm Center) சமூக ஊடக பக்கத்தில் தெரிவித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!