ADVERTISEMENT

ஓமான் பயணிக்கும் சில பயணிகளுக்கு பயணத்திற்கு முந்தைய ஹோட்டல் முன்பதிவிலிருந்து விலக்கு..!! CAA தகவல்..!!

Published: 23 Feb 2021, 2:23 PM |
Updated: 23 Feb 2021, 2:31 PM |
Posted By: admin

ஓமான் நாட்டில் கோவிட் -19 தொடர்பான உச்சக் குழு எடுத்த முடிவுகளின் அடிப்படையிலும், பிப்ரவரி 11 மற்றும் 15 ஆம் தேதிகளில் வெளியிடப்பட்ட சுற்றறிக்கைகளின் படியும் ஓமான் நாட்டிற்கு பயணிப்பவர்களில் குறிப்பிட்ட சில பயணிகள் அவர்கள் புறப்படும் விமான நிலையத்தில், பயணத்திற்கு முந்தைய உறுதிப்படுத்தப்பட்ட ஹோட்டல் முன்பதிவுகளை வழங்குவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது என சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் (CAA) கூறியுள்ளது.

ADVERTISEMENT

1. ஓமானில் அங்கீகாரம் பெற்ற வெளிநாட்டு தூதரக பணிகளில் பணிபுரியும் அதிகாரிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓமானிற்கு வருகை தரும் வெளிநாட்டு தூதர்கள்.

2. ஓமானிற்கு தனியாக பயணம் செய்யும் 18 வயது மற்றும் அதற்கு குறைவானவர்கள், அதேபோன்று 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள்.

ADVERTISEMENT

3. சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு உட்பட்டு பயணிக்கும் விமான பணியாளர்கள்.

4. உச்சகுழுவால் இணைக்கப்பட்ட சுகாதார படிவத்தின் படி உடல்நல நிலைமைகளுக்கு சிறப்பு கவனம் தேவைப்படும் நோய்வாய்ப்பட்ட பயணிகள்.

ADVERTISEMENT

5. நிவாரண தங்குமிடம் துறையால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் நிறுவன தனிமை மையங்களுக்கான அனுமதி வைத்திருப்பவர்கள்.

6. ஓமான் பிராந்திய கடல் பரப்பில் பணிபுரியும் கப்பல் குழுவினர்கள். (கப்பல் முகவரின் கடிதத்தின் அடிப்படையில் ஓமானில் தங்கியிருக்கும் கால அளவை உள்ளடக்கிய ஒரு ஹோட்டல் முன்பதிவு இருப்பதை விமான நிறுவனங்கள் உறுதி செய்ய கடமைப்பட்டுள்ளன).

மேற்கூறப்பட்ட நிபந்தனைகளுக்கு உட்படாதவர்களுக்கு உச்சகுழு வெளியிட்டிருந்த முந்தைய சுற்றறிக்கைகளில் குறிப்பிடப்பட்டுள்ள மற்ற அனைத்து தேவைகளும் செல்லுபடியாகும்” என்றும் CAA அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.