ADVERTISEMENT

அமீரகத்தில் 4 மில்லியனை கடந்த கொரோனா தடுப்பூசி பெற்றவர்களின் எண்ணிக்கை..!! சுகாதார அமைச்சகம் வெளியிட்ட தகவல்..!!

Published: 5 Feb 2021, 3:36 PM |
Updated: 5 Feb 2021, 3:41 PM |
Posted By: admin

ஐக்கிய அரபு அமீரகத்தில் வழங்கப்பட்டுவரும் கொரோனா தடுப்பூசியை பெற்றுக்கொண்டவர்களின் எண்ணிக்கை 4 மில்லியனை கடந்து விட்டதாக அமீரகத்தின் சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 158,786 தடுப்பூசிகள் வழங்கப்பட்டிருப்பதாகவும் அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்த புள்ளி விபரத்தின் அடிப்படையில் ஐக்கிய அரபு அமீரகத்தில் வெள்ளிக்கிழமை வரை சராசரியாக 100 பேருக்கு 40.53 COVID-19 தடுப்பூசி டோஸ் விநியோகிக்கப்பட்டிருப்பதாகவும் அந்த அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது.

ADVERTISEMENT

தடுப்பூசி வழங்கப்படுவது குறித்து அமைச்சகம் மேலும் தெரிவிக்கையில், இது சமூகத்தின் அனைத்து உறுப்பினர்களுக்கும் COVID-19 தடுப்பூசியை வழங்குவதற்கான அமைச்சின் திட்டத்திற்கும், தடுப்பூசியின் விளைவாக பெறப்பட்ட நோய் எதிர்ப்பு சக்தியை அடைவதற்கான முயற்சிகளுக்கும் ஏற்ப உள்ளது, மேலும் இது கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையைக் குறைக்கவும் COVID-19 வைரஸைக் கட்டுப்படுத்தவும் உதவும் எனவும் கூறியுள்ளது.

மேலும் கூறுகையில், தடுப்பூசி போடப்படுவதால் நீங்கள் தொற்றுநோயால் பாதிக்கப்பட மாட்டீர்கள் என்றோ அல்லது பரப்ப மாடீர்கள் என்றோ அர்த்தமல்ல என்பதையும் அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். அத்துடன் மக்கள் தங்களுக்கு முன் வைக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பராமரிக்க வேண்டும் என்றும் அவர்கள் மீண்டும் மீண்டும் வலியுறுத்தியுள்ளனர், இதில் முக கவசங்களை அணிந்துகொள்வதும் மற்றவர்களிடமிருந்து பாதுகாப்பான தூரத்தை பராமரிப்பதும் அடங்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT