அமீரக செய்திகள்

துபாய், அபுதாபி, ஷார்ஜா பயணிப்பவர்கள் கவனத்திற்கு.. சமீபத்திய தனிமைப்படுத்தல், PCR சோதனை விதிமுறைகள் குறித்த விளக்கம்..!!

ஐக்கிய அரபு அமீரகத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் குடியிருப்பாளர்கள் ஆகியோர் கடுமையான கொரோனாவிற்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் என அமீரக அரசு சமீபத்தில் அறிவித்துள்ளது. மேலும், அமீரகத்தின் ஒவ்வொரு பகுதியையும் பொருட்டும் மேற்கொள்ள வேண்டிய செயல்முறைகள் வேறுபடுகின்றன. துபாய், அபுதாபி மற்றும் ஷார்ஜா ஆகிய இடங்களில் தனிமைப்படுத்தல் விதிமுறைகள் முதல் PCR சோதனைகள் வரை பின்பற்றப்பட வேண்டிய பயண நடவடிக்கைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

அபுதாபி விமான நிலையம் (AUH)

(தகவல் ஆதாரம்: எதிஹாட் ஏர்வேஸ் வலைத்தளம்)

தனிமைப்படுத்தல் விதிமுறைகள்

“கிரீன் கன்ட்ரீஸ்” என பட்டியலிடப்பட்டிருக்கும் நாடுகளில் இருந்து அபுதாபி வருபவர்களுக்கு, தனிமைப்படுத்தல் தேவையில்லை. அபுதாபி வந்திறங்கிய 6 வது நாளிலும் 12 ஆம் நாளிலும் கொரோனாவிற்கான PCR சோதனை மேற்கொள்ள வேண்டும்.

“கிரீன் கன்ட்ரீஸ்” அல்லாமல் வேறு எந்த நாட்டிலிருந்தும் பயணம் செய்தால், வீட்டிலோ அல்லது ஒரு ஹோட்டலிலோ 10 நாட்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும். ஐக்கிய அரபு அமீரக அதிகாரிகளால் அதிக ஆபத்து இருப்பதாக கருதப்படும் ஒரு நாட்டிலிருந்து அபுதாபிக்கு பயணம் செய்தால், அரசுக்கு சொந்தமான தனிமைப்படுத்தல் மையத்தில் தனிமைப்படுத்த வேண்டியிருக்கும். அவ்வாறு தனிமைப்படுத்தலில் இருப்பவர்கள் அதிகாரிகள் வழங்கிய கைப்பட்டையை (wristband) தனிமைப்படுத்தல் காலம் முழுவதும் அணிந்திருக்க வேண்டும்.

PCR சோதனை

அபுதாபிக்கு பயணிக்கும் அனைவரும் 96 மணிநேரத்திற்குள் பெறப்பட்ட கொரோனாவிற்கான நெகடிவ் PCR சோதனை முடிவினை பிரிண்ட் செய்து வைத்திருக்க வேண்டும். பயணிகள் அபுதாபி வந்தவுடன் அவர்களுக்கு மேலும் ஒரு PCR சோதனை மேற்கொள்ளப்படும்.

குடியிருப்பாளர்கள்

அபுதாபிக்கு வரும் குடியிருப்பாளர்கள் தாங்கள் அபுதாபிக்குள் நுழைவதற்கான அனுமதி நிலையை சரிபார்க்க uaeentry.ica.gov.ae என்ற லிங்கில் சென்று செக் செய்து கொள்ள வேண்டும்.

சுற்றுலாப் பயணிகள்

அபுதாபி வழியாக துபாய்க்கு பயணிக்கும் சுற்றுலாப் பயணிகளாக இருந்தால், அவர்கள் அபுதாபி சுற்றுலா விசா வைத்திருக்க வேண்டும் – துபாயில் வழங்கப்பட்ட சுற்றுலா விசாக்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.

ட்ரேசிங் அப்ளிகேஷன்

அபுதாபிக்கு வரும் அனைத்து பயணிகளும் AlHosn பயன்பாட்டை பதிவிறக்கம் செய்திருக்க வேண்டும்.

துபாய் விமான நிலையம் (DXB)

(தகவல் ஆதாரம்: துபாய் விமான நிலைய வலைத்தளம்)

PCR சோதனை

துபாய்க்கு வரும் அனைத்து ஐக்கிய அரபு அமீரக குடியிருப்பாளர்கள், சுற்றுலாப் பயணிகள் மற்றும் GCC குடிமக்கள் ஆகியோர் விமானப் புறப்படும் நேரத்திற்கு 72 மணி நேரத்திற்குள் பெறப்பட்ட கொரோனாவிற்கான நெகடிவ் PCR டெஸ்ட் ரிசல்ட்டை வைத்திருக்க வேண்டும். துபாய் விமான நிலையம் வந்தவுடன் நெகடிவ் டெஸ்ட் ரிசல்ட்டின் பிரிண்ட் செய்த படிவத்தை சமர்ப்பிக்க வேண்டும். அந்த சான்றிதழானது ஆங்கிலம் அல்லது அரபு மொழியில் இருக்க வேண்டும். கையால் எழுதப்பட்ட சான்றிதழ்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.

சில பயணிகள் விமான நிலையம் வந்தவுடன் கூடுதல் சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டியிருக்கும். மேலும், 12 வயதிற்குட்பட்ட குழந்தைகள் மற்றும் மிதமான முதல் கடுமையான குறைபாடுகள் உள்ள பயணிகளுக்கு PCR சோதனையில் இருந்து விலக்கு அளிக்கப்படும்.

அமீரக குடியிருப்பாளர்கள்

அனைத்து துபாய் குடியிருப்பாளர்களும் துபாய்க்கு திரும்புவதற்கு முன் பொது வதிவிட மற்றும் வெளிநாட்டு விவகார இயக்குநரகத்திடம் (GDRFA) ஒப்புதல் பெற வேண்டும். துபாய் தவிர்த்து அமீரகத்தின் மற்ற பகுதிகளில் வழங்கப்பட்ட விசா வைத்திருக்கும் குடியிருப்பாளர்கள் துபாய்க்கு திரும்புவதற்கு முன் ICA விடம் ஒப்புதல் பெற்றிருக்க வேண்டும்.

ட்ரேசிங் அப்ளிகேஷன்

துபாய்க்கு பயணிக்கும் அனைத்து பயணிகளும் Covid-19 DXB அப்ளிகேஷனை டவுன்லோடு செய்து ரிஜிஸ்டர் செய்திருக்க வேண்டும்.

ஷார்ஜா விமான நிலையம் (SHJ)

(தகவல் ஆதாரம்: ஷார்ஜா விமான நிலைய வலைத்தளம்.)

PCR சோதனை

ஷார்ஜாவிற்கு பயணிக்கும் அனைத்து பயணிகளும் புறப்படுவதற்கு முன் 96 மணி நேரத்திற்குள் மேற்கொள்ளப்பட்ட கொரோனாவிற்கான நெகடிவ் PCR டெஸ்ட் ரிசல்ட்டினை வைத்திருக்க வேண்டும். பயணிகள் ஷார்ஜா வந்தவுடன் மற்றொரு PCR சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டியிருக்கும்.

தனிமைப்படுத்தல் விதிமுறைகள்

அனைத்து பயணிகளும் தங்கள் PCR சோதனைகளின் முடிவுகளைப் பெறும் வரை அவர்கள் தங்குமிடத்தில் சுய தனிமைப்படுத்தப்பட வேண்டும்.

PCR சோதனை முடிவு நேர்மறையானதாக இருந்தால், அவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்த வேண்டும், பயணிகள் அல்லது அவர்களின் ஸ்பான்சர்கள் சிகிச்சை மற்றும் தனிமைப்படுத்தலின் செலவுகளை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

சுற்றுலாப் பயணிகள்

சுற்றுலா பயணிகளுக்கு சர்வதேச சுகாதார காப்பீடு இருக்க வேண்டும். மேலும் தொடர்பு கண்காணிப்பு நோக்கங்களுக்காக அவர்கள் ஐக்கிய அரபு அமீரக மொபைல் எண்ணையும் கொண்டிருக்க வேண்டும். PCR டெஸ்டிங் பகுதிகளில் சிம் கார்டுகள் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளன.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!