ADVERTISEMENT

UAE: இனி பார்க்கிங் விதிமீறலுக்கு பேப்பர் டிக்கெட் வழங்கப்படாது..!! டிஜிட்டல் முறைக்கு மாறும் RTA.!!

Published: 26 Mar 2021, 1:26 PM |
Updated: 26 Mar 2021, 1:31 PM |
Posted By: admin

ஐக்கிய அரபு அமீரகத்தில் பார்க்கிங் விதிமீறல் புரிந்த வாகனங்களின் முன்னால் அபராதத்திற்கான பார்க்கிங் ஸ்டிக்கர் அதிகாரிகளால் வைக்கப்படுவது பொதுவான நிகழ்வாகும். ஆனால் இனி துபாயில் பார்க்கிங் விதிமீறல் புரிந்த வாகன ஓட்டிகளுக்கு SMS மற்றும் ஈமெயில் மூலம் மட்டுமே பார்க்கிங் மீறல் குறித்த அறிவிப்புகள் தெரிவிக்கப்படும் என தற்பொழுது தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) மார்ச் 28, ஞாயிற்றுக்கிழமை முதல் அனைத்து பேப்பர் மூலம் அறிவிக்கப்படும் பார்க்கிங் மீறல்களை நிறுத்துவதாக அறிவித்துள்ளது, அரசாங்க நிறுவனங்களில் டிஜிட்டல்மயமாக்கல் திட்டத்திற்கு ஏற்ப இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், RTA -வின் வாடிக்கையாளர் சேவை எண்களை அழைப்பதன் மூலம் துபாயில் உள்ள வாகன உரிமையாளர்கள் தங்கள் விவரங்களை புதுப்பிக்க ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது. இது குறித்து வெளியிடப்பட்ட செய்தியில், “மார்ச் 28, ஞாயிற்றுக்கிழமை தொடங்கி, சுற்றுசூழலை பேணுவதை கருத்தில் கொண்டு அனைத்து பேப்பர் மூலம் அறிவிக்கப்படும் பார்க்கிங் மீறல்கள் நிறுத்தப்படும் மற்றும் அதற்கு பதிலாக SMS மற்றும் மின்னஞ்சல் வழியாக பார்க்கிங் மீறல்கள் குறித்த அறிவிப்புகள் தெரிவிக்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

மேலும், RTA தெரிவிக்கையில், “வாகன ஓட்டிகள் 8009090 என்ற எண்ணை அழைப்பதன் மூலம் உங்கள் மொபைல் எண் மற்றும் மின்னஞ்சலை உங்கள் போக்குவரத்து கோப்பில் (Traffic File) அப்டேட் செய்து கொள்க” என்றும் குறிப்பிட்டுள்ளது.

ADVERTISEMENT