அமீரக செய்திகள்

துபாயில் வேலைவாய்ப்பை இரு மடங்காக்க துபாய் ஆட்சியாளாரின் புதிய திட்டம்..!!

பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு வேலைவாய்ப்பையும் பல்வேறு துறைகளை சார்ந்த ஆயிரக்கணக்கான நிறுவனங்களையும் கொண்டிருக்கும் உலக வர்த்தகத்தின் முக்கிய நகரமான துபாயில் உள்ளடக்கம் (content), வடிவமைப்பு (design) மற்றும் கலாச்சாரத்தில் (culture) நிபுணத்துவம் வாய்ந்த படைப்பு நிறுவனங்களின் (creative companies) எண்ணிக்கையை இரட்டிப்பாக்க ஒரு புதிய மூலோபய திட்டம் (new strategic programme) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

“துபாய் ஆக்கபூர்வமான பொருளாதாரத்தின் தலைநகரம் (Dubai is the capital of the creative economy)” என்றதே தற்போது துபாயில் தொடங்கப்பட்டுள்ள திட்டமாகும். இது துபாய் நகரத்தை உலக பொருளாதாரத்தின் தலைநகராக மேம்படுத்தும். அதன்படி, அடுத்த ஐந்து ஆண்டுகளில் படைப்பு நிறுவனங்களின் எண்ணிக்கையை 8,000 இல் இருந்து 15,000 ஆக இரட்டிப்பாக்கவும், படைப்பாற்றல் நபர்களின் (creative people) எண்ணிக்கையை 70,000 இல் இருந்து 150,000 வரை இரட்டிப்பாக்குவதையும் நோக்கமாகக் கொண்டு இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதிலுமிருந்து 1,000 படைப்பாளிகள் மற்றும் கலைஞர்களுக்கு கலாச்சார விசாக்களை வழங்குவதாக துபாய் சமீபத்தில் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ஐக்கிய அரபு அமீரகத்தின் துணைத் தலைவரும் பிரதமரும் துபாய் ஆட்சியாளருமான மாண்புமிகு ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அவர்கள் இந்த திட்டம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் “கிரியேட்டிவ் பொருளாதாரத்தின் தலைநகரான துபாய், உள்ளடக்கம், வடிவமைப்பு மற்றும் கலாச்சாரம் ஆகிய துறைகளில் உள்ள கிரியேட்டிவ் நிறுவனங்களின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்க இன்று நாங்கள் தொடங்கிய ஒரு மூலோபாய திட்டமாகும் இது” என்று ட்வீட் செய்துள்ளார்.

“வடிவமைப்பு, உள்ளடக்கம், கலாச்சாரம், கலைகள் போன்றவற்றில் படைப்பு வளாகங்கள் எங்களிடம் உள்ளன, மற்றவற்றை நாங்கள் தொடங்குவோம். எங்கள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இந்த துறையின் பங்களிப்பை 2.6 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக உயர்த்துவதற்கான குறிக்கோள் உள்ளது. ஐக்கிய அரபு அமீரகம் ஒரு உலகளாவிய பொருளாதார மூலதனம். படைப்பாற்றல் என்பது நமது பொருளாதாரத்தின் ஒரு பகுதியாகும், நமது வாழ்க்கைத் தரம் மற்றும் நமது நாட்டின் எதிர்காலத்திற்கான ஒரு முக்கிய உந்துகோள்” என்று மேலும் அந்த ட்வீட்டில் குறிப்பிட்டுள்ளார்.

துபாய் கிரியேட்டிவ் பொருளாதார திட்டமானது துபாயில் படைப்புத் தொழில்களின் வளர்ச்சி மற்றும் செழிப்பைத் தூண்டுவதற்குத் தேவையான சட்ட மற்றும் முதலீட்டுச் சூழலை மேம்படுத்துவதை உள்ளடக்கியது என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஒரு கிரியேட்டிவ் பொருளாதாரத்தின் முக்கிய கருவானது வெளியீடு, எழுதுதல், ஆடியோ காட்சி மற்றும் அச்சு ஊடகங்கள் உள்ளிட்ட பரந்த மற்றும் மாறுபட்ட துறைகளை உள்ளடக்கியது. சினிமா, இசை மற்றும் வீடியோ ஆகியவையும் இந்தத் துறையின் ஒரு பகுதியாகும். கலை மற்றும் கலாச்சார தொழில்கள், கலாச்சார பாரம்பரிய அருங்காட்சியகங்கள், வரலாற்று தளங்கள், காப்பகங்கள், முக்கிய கலாச்சார நிகழ்வுகள், நூலகங்கள் மற்றும் மென்பொருள் மற்றும் வீடியோ கேம் தொழில் ஆகியவை பிற துறைகள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதே போன்று ஃபேஷன், கேமிங், மென்பொருள் அல்லது கட்டிடக்கலை தொடர்பான வடிவமைப்பு ஆகியவையும் இதில் அடங்கும் உமாவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!