அமீரக செய்திகள்

அமீரகத்தில் உள்ள இந்திய தூதரகத்தில் பணிபுரிய விண்ணப்பங்கள் ஏற்பு.. கடைசி நாளை வெளியிட்ட தூதரகம்..!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள இந்திய தூதரகம் அபுதாபியில் மெசஞ்சர் பணிக்கு பணியிடம் காலியாக இருப்பதாகவும், அந்த பணியில் சேர விரும்புபவர்கள் தங்களின் விண்ணப்பங்களை அனுப்புமாறும் கேட்டுக்கொண்டுள்ளது.

மெசஞ்சர் பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் உயர்நிலைப் பள்ளி கல்வியும், அமீரக குடியிருப்பு விசாவில் வசிப்பவராகவும் இருக்க வேண்டும் என்றும் இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

விண்ணப்பிக்க தகுதியானவர்கள் தங்களது CV.க்களை தபால் மூலமாகவோ அல்லது பாஸ்போர்ட் மற்றும் விசா பக்கத்தின் நகலுடன் அண்மையில் எடுக்கப்பட்ட புகைப்படம் சேர்த்து ஏப்ரல் 20, செவ்வாய்க்கிழமைக்குள் நேரடியாக இந்திய தூதரகத்தில் சமர்ப்பிக்கலாம் என்றும் கூறியுள்ளது.

தபால் மூலமாக தங்களின் CV-க்களை அனுப்பும் விண்ணப்பதாரர்கள் இந்திய தூதரகத்தின் தபால் பெட்டி எண் 4090 என்ற முகவரியிலும், அல்லது நேரடியாக கொடுக்க விரும்புவர்கள் அபுதாபி ஏர்போர்ட் ரோட்டில் உள்ள தூதரக பகுதியில் Plot No.10 என்ற முகவரியில் இருக்கும் இந்திய தூதரகத்திற்கு நேரில் வந்தும் CV-யை தரலாம் என குறிப்பிட்டுள்ளது.

குறிப்பிட்ட பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்கள் மட்டுமே நேர்காணலுக்கு தொடர்பு கொள்ளப்படுவார்கள் என்று தூதரகம் தெரிவித்துள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!