ADVERTISEMENT

ஓமானில் மீண்டும் அமலுக்கு வரும் லாக்டவுன்..!! மசூதிகளில் தராவீஹ் தொழுகை கிடையாது..!! உச்சக்குழு அறிவிப்பு..!!

Published: 13 Apr 2021, 3:14 PM |
Updated: 13 Apr 2021, 3:46 PM |
Posted By: admin

புனித ரமலான் மாதத்தில் கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த உச்சக் குழு மேற்கொள்ளும் முயற்சிகளின் ஒரு பகுதியாக, புதன்கிழமை (ஏப்ரல் 14) முதல் ஓமான் முழுவதும் இரவு நேரத்தில் லாக்டவுன் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

லாக்டவுன் அமலில் இருக்கும் நேரமான இரவு 9 மணி முதல் அதிகாலை 4 மணி வரை தனிநபர்கள் மற்றும் வாகனங்களின் அனைத்து வணிக நடவடிக்கைகள் மற்றும் இயக்கங்களுக்கு தடை விதிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

அதே போன்று, எந்தவொரு மசூதிகளிலும் தாராவீஹ் தொழுகை இருக்காது மற்றும் அனைத்து கூட்டங்களும் மசூதிகள் மற்றும் கூடாரங்கள் அல்லது பொதுக்கூட்டங்கள் போன்ற பிற இடங்களில் இஃப்தார் மேற்கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

மேலும், ரமலான் மாதத்தில் அனைத்து குழு நடவடிக்கைகள், சமூக, விளையாட்டு, கலாச்சார அல்லது வேறு எந்த கூட்டு நடவடிக்கைகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

அத்துடன் ஏப்ரல் 14, 2021 முதல், வார நாட்களில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை, அமரத், மஸ்கட், முத்ரா, சீப் மற்றும் பவுசர் ஆகிய இடங்களில் தடுப்பூசி சேவைகள் கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT