கொரோனா விதிமீறலை மீறுபவர்களுக்கான அபராத தொகையை உயர்த்திய ஓமான்..!!

ஓமான் நாட்டில் கடந்த ஆண்டு கொரோனா பரவல் அதிகரித்ததை தொடர்ந்து சுப்ரீம் கமிட்டியால் விதிக்கப்பட்ட கொரோனாவிற்கான கட்டுப்பாடுகளை மீறுபவர்களுக்கு விதிக்கப்படும் அபராதம் தொடர்பான 151/2020 ஆணையின் சில விதிகளை திருத்தி புதிய அபராதம் தொடர்பான 151/2020 ஆணையை காவல்துறை மற்றும் சுங்க ஆணையத்தின் பொது ஆய்வாளர் இன்று வெளியிட்டுள்ளார்.

தற்போது திருத்தம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டிருக்கும் புதிய ஆணையில் சுப்ரீம் கமிட்டியால் ஏற்கனவே விதிக்கப்பட்டிருந்த விதிகளை மீறியவர்களுக்கான அபராத தொகை மேலும் உயர்த்தப்பட்டுள்ளது.

வீடு மற்றும் நிறுவன தனிமைப்படுத்தல் குறித்த வழிமுறைகளைப் பின்பற்றாத குடியிருப்பாளர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த அபராதம் RO 200 இலிருந்து தற்போது RO 300 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

சமூக இடைவெளி, முகக்கவசம் அணிதல் போன்ற கொரோனாவிற்கான விதிமுறைகளைப் பின்பற்றாத வணிகக் கடைகள் மற்றும் தனியார் நிறுவனங்களுக்கான தண்டனையாக ஒரு மாத காலம் நிறுவனத்தை தற்காலிகமாக மூடுவது தவிர RO 3,000 அபராதமும் விதிக்கப்படும்.

கோவிட் -19 சோதனையை மேற்கொள்ளவோ அல்லது மீண்டும் மேற்கொள்ள மறுப்பவர்களுக்கான அபராதம் புதிய ஆணையின் படி RO 200 இலிருந்து RO 300 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

தராசுட் சிஸ்டத்தில் (tarassud system) கட்டாயம் பதிவு செய்ய வேண்டியவர்கள் அதில் பதிவு செய்ய மறுத்தால் அவர்களுக்கும் RO 300 அபராதம் விதிக்கப்படும்.