ADVERTISEMENT

துபாய் காவல்துறையின் சொகுசு காரில் பயணிக்க விரும்பிய சிறுவன்..!! வீட்டிற்கே சென்று சிறுவனின் கனவை நிறைவேற்றிய காவல்துறை..!!

Published: 17 Apr 2021, 4:19 PM |
Updated: 18 Apr 2021, 4:35 AM |
Posted By: admin

துபாய் காவல்துறை சமீபத்தில் ஒரு ஆசிய குழந்தையின் கனவை நிறைவேற்றிய சம்பவம் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT

9 வயது சிறுவனான லூகாஸ் லி சாவோ எப்போதும் தனது வீட்டில் காவல்துறையை வரவேற்கவும், துபாய் காவல்துறையின் உலக புகழ்பெற்ற சொகுசு கார்களில் ஒன்றில் சவாரி செய்யவும் விரும்பியுள்ளான்.

துபாயின் சுற்றுலா தலங்களில் ஒரு ஆடம்பரமான போலிஸ் ரோந்து வாகனத்தில் பயணம் செய்ய விரும்பும் தனது மகனின் விருப்பத்தை வெளிப்படுத்த லூகாஸ் லி சாவோவின் தந்தை துபாய் போலீஸைத் தொடர்பு கொண்டுள்ளார்.

ADVERTISEMENT

அதனைத் தொடர்ந்து, சுற்றுலா காவல் துறையைச் சேர்ந்த ஒரு குழு, பாதுகாப்பு ஊடகத் துறையுடன் இணைந்து, லூகாஸின் வீட்டிற்குச் சென்று துபாய் காவல்துறையின் சீருடை மற்றும் துபாய் காவல்துறையின் பொம்மைகளுடன் சென்று அச்சிறுவனை ஆச்சரியப்படுத்தியது.

ADVERTISEMENT

பின்னர் அவர்கள் ஒன்பது வயது சிறுவனை துபாயின் ஒரு சூப்பர் கார் போலீஸ் ரோந்து வாகனத்தில் ஏற்றிக் கொண்டு துபாயின் பல்வேறு பகுதிகளுக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

லூகாஸின் பெற்றோர் தங்கள் மகனை மகிழ்ச்சியடையச் செய்வதற்கும், வாழ்நாள் முழுவதும் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தவும் துபாய் காவல்துறை காட்டிய ஆர்வத்திற்கு தங்களின் நன்றியை தெரிவித்துள்ளனர்.