போக்குவரத்து நிறுத்தங்களில் ரெட் சிக்னலின் போது தங்களது வாகனங்களை நிறுத்தாமல் சாலையைக் கடந்த வாகனங்கள் காவல்துறையால் பிடிக்கப்பட்டால், வாகன ஓட்டிகள் தங்கள் வாகனத்தை விடுவிப்பதற்கு 50,000 திர்ஹம் கட்டணம் செலுத்த வேண்டும் என்று அபுதாபி காவல்துறை வாகன ஓட்டிகளுக்கு நினைவுபடுத்தியுள்ளது.
அபுதாபியில் வாகனங்களை சிறையில் அடைப்பது தொடர்பான சட்ட எண் (5) இன் படி, குற்றவாளிகளுக்கு 1,000 திர்ஹம் அபராதம் மற்றும் போக்குவரத்து விதிமீறலுக்கு 12 கரும்புள்ளிகள் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், கட்டணம் செலுத்தப்படும் வரை வாகனம் சிறையில் இருக்கும் என்றும், உரிமையாளர் மூன்று மாதங்களுக்குள் கட்டணத்தை செலுத்தி வாகனத்தை கோரவில்லை என்றால், அது ஏலம் விடப்படும் என்றும் காவல்துறை குறிப்பிட்டுள்ளது.