ADVERTISEMENT

UAE: குடியிருப்பாளர்களுக்கு ஈத் அல் பித்ர் வாழ்த்துக்களை தெரிவித்த அமீரக தலைவர்கள்..!!

Published: 13 May 2021, 4:11 AM |
Updated: 13 May 2021, 4:12 AM |
Posted By: admin

ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று ஈத் அல் பித்ர் கொண்டாடப்படுவதை முன்னிட்டு அமீரக தலைவர்கள், சமூக ஊடகங்களில் குடியிருப்பாளர்களுக்கும் உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

ADVERTISEMENT

ஐக்கிய அரபு அமீரகத்தின் துணைத் தலைவரும் பிரதமரும் துபாய் ஆட்சியாளருமான ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், “ஐக்கிய அரபு அமீரக மக்களுக்கும் உலகில் உள்ள அனைத்து முஸ்லிம் மக்களுக்கும் பெருநாள் வாழ்த்துக்கள். எதிர்வரும் நாட்கள் நமக்கு ஆசீர்வாதங்களையும், அமைதியையும், செழிப்பையும் தரட்டும். நம்மை ஆசீர்வதித்து நாம் புரியும் நல்ல காரியங்களை ஏற்றுக் கொள்ளுமாறு சர்வவல்லமையுள்ள இறைவனிடம் நாம் கேட்டுக்கொள்வோம்” என்று தெரிவித்துள்ளார்.

அபுதாபியின் மகுட இளவரசரும், ஐக்கிய அரபு அமீரக ஆயுதப்படைகளின் துணை உச்ச தளபதியுமான ஷேக் முகமது பின் சையத் அல் நஹ்யான் அவர்கள், ஐக்கிய அரபு அமீரக தலைவர்கள் மற்றும் நாட்டு மக்களுக்கு பெருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “இந்த புனித நாளில் நம் தேசம், பிராந்திய மற்றும் உலக மக்களுக்கு அமைதி, செழிப்பு மற்றும் மகிழ்ச்சியை அளிக்க இறைவனிடம் பிரார்த்திப்போம்” என்று கூறியுள்ளார்.

ADVERTISEMENT

அதே போல் ராஸ் அல் கைமாவின் ஆட்சியாளர் ஷேக் சவுத் பின் சக்ர் அல் காசிமி, ஷார்ஜாவைச் சேர்ந்த ஷேக் டாக்டர் சுல்தான் பின் முஹம்மது அல் காசிமி, அஜ்மானின் ஷேக் ஹுமாய்த் பின் ரஷீத் அல் நுவைமி, புஜைராவின் ஷேக் ஹமாத் பின் முகமது அல் ஷர்கி மற்றும் உம் அல் குவைனின் ஆட்சியாளர் ஷேக் சவுத் பின் ரஷீத் அல் முஅல்லா ஆகியோரும் ஐக்கிய அரபு அமீரக மக்கள் மற்றும் உலகெங்கிலும் உள்ள முஸ்லீம் மக்களுக்கு பெருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

 

ADVERTISEMENT