ADVERTISEMENT

சவூதி அரேபியாவில் பிறை தென்படாததால் வியாழக்கிழமை ஈத் அல் பித்ர் என அறிவிப்பு..!!

Published: 11 May 2021, 4:24 PM |
Updated: 11 May 2021, 4:36 PM |
Posted By: admin

சவூதி அரேபியாவில் ஷவ்வால் மாதத்திற்கான பிறை இன்று தென்படாததால், இந்த வருட ரமலான் மாதம் 30 நாட்களாக இருக்கும் என்றும், வரும் வியாழக்கிழமை (மே 13,2021) ஷவ்வால் மாதம் 1 ம் தேதி ஈத் அல் பித்ர் என்றும் சவூதி அரேபியாவின் பிறை பார்க்கும் கமிட்டி அறிவித்துள்ளது. சவூதி அரேபியா வெளியிட்ட அறிவிப்பை தொடர்ந்து ஐக்கிய அரபு அமீரகத்திலும் வியாழக்கிழமை ஈத் அல் பித்ர் கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதே போன்று கத்தார், மலேசியா, இந்தோனேசியா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளிலும் ஈத் அல் பித்ர் வியாழக்கிழமை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

மத்திய அரசின் அறிவிப்பின்படி, ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிப்பவர்கள் ரமலான் 29, 30, மற்றும் ஷவ்வால் 1, 2 மற்றும் 3 (மே 11 செவ்வாய்க்கிழமை முதல் மே 15 சனிக்கிழமை வரை) ஐந்து நாள் ஈத் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

ஈத் அல் பித்ர் விடுமுறை நாட்களில் மக்கள் ஒன்று கூடுவதை தவிர்க்கவும், தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றுமாறும் ஐக்கிய அரபு அமீரக அரசு பொது மக்களை வலியுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT