UAE: ஐந்து நாட்கள் நடைபெறவிருக்கும் “Big Shopper Sale”.. பொருட்களுக்கு 70% வரை தள்ளுபடி..!!
துபாயில் இந்த வார இறுதியில் நடைபெற்ற மூன்று நாள் ஷாப்பிங் விற்பனைக்குப் பிறகு, மற்றொரு பெரிய ஷாப்பிங் சேலானது இந்த வாரம் அமீரகத்தில் நடைபெறவுள்ளது.
ஷார்ஜாவின் எக்ஸ்போ மையத்தில் புதன்கிழமை (ஜூன் 2) முதல் ஐந்து நாள் ஷாப்பிங் விற்பனை தொடங்கி ஜூன் 6 ம் தேதி முடிவடையும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் பொருட்களுக்கு 70 சதவீதம் வரை தள்ளுபடி அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Big Shopper Sale எனும் இந்த விற்பனையில் அனைத்து முக்கிய உலகளாவிய மற்றும் உள்நாட்டு பிராண்டுகளின் பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
இதில், குடியிருப்பாளர்கள் Aldo, Al Mandoos, Aldo Accessory, Call it Springs, LC Waikiki, Hush Puppies, Toms, Brand Bazaar, Gant, Lasenza, Lacoste, Fila, Belissimmo Perfumes, Crayola, VTECH மற்றும் இது போன்ற பல ஏராளமான பெரிய பிராண்டுகள் மற்றும் சில்லறை விற்பனையாளர்களின் பொருட்களை தள்ளுபடி விலையில் வாங்கலாம்.
அனைத்து வகையான ஆடைகள், விளையாட்டு பொருட்கள், பாதணிகள், கைப்பைகள், அழகுசாதனப் பொருட்கள் மற்றும் அக்சசரீஸ் உள்ளிட்ட பலவகையான பொருட்கள் காட்சிப்படுத்தப்படும் என கூறப்பட்டுள்ளது.
இதற்கான நுழைவு கட்டணம் 5 திர்ஹம் என்றும், பார்க்கிங் இலவசம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
“பிக் ஷாப்பர் சேல் இந்த ஆண்டின் மிகப்பெரிய பேஷன் நிகழ்வுகளில் ஒன்றாகும். இதனை குடியிருப்பாளர்கள் தவறவிடாமல் கலந்து கொள்ள வேண்டும்”என்று எக்ஸ்போ சென்டர் ஷார்ஜாவின் தலைமை நிர்வாக அதிகாரி சைஃப் முகமது அல் மிட்ஃபா கூறியுள்ளார்.
“70 சதவிகிதம் மற்றும் அதற்கு மேற்பட்ட தள்ளுபடிகளில் பரவலான தயாரிப்புப் பொருட்கள் விற்பனைக்கு வந்துள்ள நிலையில், பொருட்களை மலிவு விலையில் வாங்கும் வாய்ப்பினை இது வழங்குகிறது. மேலும், நேரத்தை நீட்டிக்குமாறு கருத்துகள் தெரிவித்த நுகர்வோர்களைக் கருத்துக்களைக் கருத்தில் கொண்டு, இந்நிகழ்வு காலை 11 மணி முதல் இரவு 11 மணி வரை பொதுமக்களுக்குத் திறந்திருக்கும்” என்று நிகழ்வின் கூட்டாளர் மற்றும் லிஸ் கண்காட்சியின் பொது மேலாளர் ஜேக்கப் வர்கீஸ் கூறியிருக்கிறார்.