ADVERTISEMENT

அமீரகத்தில் ஜூன் மாதத்திற்கான பெட்ரோல் மற்றும் டீசல் விலை அறிவிப்பு..!!

Published: 30 May 2021, 9:47 AM |
Updated: 30 May 2021, 9:48 AM |
Posted By: admin

ஐக்கிய அரபு அமீரகத்தில் மே மாதம் நிறைவடைவதை முன்னிட்டு ஜூன் மாதத்திற்கான எரிபொருள் விலையை அமீரகத்தின் எரிபொருள் விலைக்குழு அறிவித்துள்ளது.

ADVERTISEMENT

அமீரகத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையானது கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு மாறாமல் கடந்த பிப்ரவரி மாதம் வரை ஒரே விலை நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில் தற்பொழுது தொடர்ச்சியாக எரிபொருள் விலையானது சற்று உயர்த்தப்பட்டு வருகிறது.

ஜூன் மாதத்திற்கான எரிபொருள் விலை பின்வருமாறு:

  • சூப்பர் 98 : தற்பொழுது ஒரு லிட்டருக்கு 2.30 திர்ஹம் என விற்கப்படும் நிலையில் ஜூன் மாதத்தில் ஒரு லிட்டருக்கு 2.38 திர்ஹமாக சற்று உயர்த்தப்பட்டுள்ளது.
  • ஸ்பெஷல் 95 : தற்பொழுது ஒரு லிட்டருக்கு 2.18 திர்ஹம் என விற்கப்படும் நிலையில் ஜூன் மாதத்தில் ஒரு லிட்டருக்கு 2.27 திர்ஹமாக சற்று உயர்த்தப்பட்டுள்ளது
  • டீசல் : மே மாதத்தில் 2.17 திர்ஹமாக விற்கப்படும் நிலையில் ஜூன் மாதம் முதல் லிட்டருக்கு 2.30 திர்ஹமாக உயர்த்தப்பட்டுள்ளது.

 

ADVERTISEMENT

 

ADVERTISEMENT