ஒரு ஆண்டிற்கும் மேலாக நீடிக்கும் சர்வதேச விமானப் போக்குவரத்துத் தடையை மீண்டும் நீட்டித்தது இந்தியா..!!
இந்தியாவில் கொரோனாவின் பாதிப்பால், கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் சர்வதேச விமானப் போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டு ஓரு ஆண்டிற்கும் மேலான நிலையில், தற்பொழுது இந்த தடையானது ஜூன் 30 ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் (DGCA) அறிவித்துள்ளது.
இந்தியாவில் தற்பொழுது நிலவி வரும் கொரோனாவின் இரண்டாம் அலை பாதிப்பால், வந்தே பாரத் திட்டம் மற்றும் ஏர் பபுள் ஒப்பந்தத்தின் அடிப்படையில் சிறப்பு விமான சேவைகளை இயக்கி வந்த பல்வேறு நாடுகளும் இந்தியாவிற்கு மீண்டும் பயணத்தடையை அறிவித்துள்ளன.
இந்நிலையில், இந்தியாவின் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் சர்வதேச விமானப் போக்குவரத்திற்கான தடையை நீட்டிப்பதாக அறிவிப்பு ஒன்றை தற்பொழுது வெளியிட்டுள்ளது.
இருப்பினும், இந்த தடையானது சரக்கு விமானங்களுக்கும், DGCA-வினால் அங்கீகரிக்கப்பட்டு இயக்கப்படும் சிறப்பு விமான சேவைகளுக்கும் பொருந்தாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
— DGCA (@DGCAIndia) May 28, 2021