ஓமான்: தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் மதிய ஓய்வு இடைவேளை ஜூன் முதல் துவக்கம்..!! தொழிலாளர் அமைச்சகம் அறிவிப்பு..!!
வளைகுடா நாடுகளை பொறுத்தவரை கோடைகாலங்களில் ஏற்படும் அதிக வெப்பத்தின் காரணமாக மதிய வேளைகளில் நேரடியாக சூரிய ஒளி படுமாறு வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு மதிய நேர இடைவேளை கொடுப்பது வழமையாக நடக்கும் நிகழ்வாகும். இந்த ஆண்டிற்கான கோடைகாலம் ஆரம்பிப்பதை முன்னிட்டு வெயிலின் தாக்கம் தற்பொழுது அதிகமாகவே இருக்கின்றது.
எனவே, இந்த வருடத்திற்கான கோடைகாலத்தை முன்னிட்டு ஓமானில் ஜூன், ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் கட்டுமான இடங்கள் மற்றும் திறந்தவெளி பகுதிகளில் தொழிலாளர்கள் வேலை செய்யக்கூடாது என்று தொழிலாளர் அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொழில் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியத்திற்கான விதிமுறைகள் குறித்த பிரிவு 16 ன் படி, “ஒவ்வொரு ஆண்டும் ஜூன், ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் பிற்பகல் 12.30 மணி முதல் பிற்பகல் 3.30 மணி வரை தொழிலாளர்கள் கட்டுமான தளங்கள் அல்லது அதிக வெப்பநிலை இடங்களில் வேலை செய்யக்கூடாது” என்பது நிறுவனங்கள் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டிய சட்டமாகும்.