ADVERTISEMENT

தொற்றுநோய் காலத்திலும் 248,000 புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கி அசத்திய அமீரகம்..!! துபாய் ஆட்சியாளர் ட்வீட்..!!

Published: 23 May 2021, 9:08 AM |
Updated: 23 May 2021, 9:23 AM |
Posted By: admin

கொரோனா வைரஸ் தாக்கத்தினால், கடந்த ஆண்டு உலகப் பொருளாதாரமே பெரிதும் ஆட்டம் கண்டு சர்வதேச வர்த்தகம் வீழ்ச்சியடைந்த நிலையிலும், ஆயிரக்கணக்கான புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கி ஐக்கிய அரபு அமீரகம் மற்ற உலக நாடுகளை விட தனித்து நின்று தனது பொருளாதாரத்தில் சிறந்து விளங்குவதை மீண்டும் நிரூபித்துள்ளது.

ADVERTISEMENT

ஐக்கிய அரபு அமீரகத்தின் துணைத் தலைவரும் பிரதமரும் துபாய் ஆட்சியாளருமான மாண்புமிகு ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அவர்கள் கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக உலக பொருளாதாரத்தில் மந்தநிலை ஏற்பட்டு மில்லியன் கணக்கான மக்கள் வேலையை இழந்து அல்லது வேலையில்லாமல் தவித்த போது அமீரகம் மட்டும் கிட்டத்தட்ட 248,000 வேலைவாய்ப்புகளை உருவாக்கியது என்று தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், “2020 ம் ஆண்டில் உலக பொருளாதாரம் 4 சதவிகிதம் சுருங்கியது. சர்வதேச வர்த்தகம் 20 சதவிகிதம் குறைந்தது மற்றும் உலகம் முழுவதும் மில்லியன் கணக்கான மக்கள் வேலைகளை இழந்தனர்”.

ADVERTISEMENT

“ஆனால் அதே ஆண்டில், ஐக்கிய அரபு அமீரக பொருளாதாரத் துறையானது சில்லறை துறை மற்றும் மின் வணிகத்தில் 100,000 வேலைகளையும், நிதி, தொழில்நுட்பம் மற்றும் தொலைத்தொடர்பு துறையில் 148,000 வேலைகளையும் உருவாக்கியது” என்று கூறியுள்ளார்.

தொற்றுநோயைக் கையாள்வதற்கான ஐக்கிய அரபு அமீரகத்தின் வெற்றி பற்றி குறிப்பிடுகையில், தொற்றுநோய்க்கு எதிரான வெற்றிகரமான முன்னேற்றத்தைத் தொடர்ந்து வணிகத்திற்கான பயண மற்றும் பொருளாதாரத்திற்கான எல்லைகளைத் திறந்த மிகச் சில நாடுகளில் அமீரகம் ஒன்றாகும் என்றும், இதன் விளைவாக ஒரு சவாலான சூழலுக்கு மத்தியில் அதிக எண்ணிக்கையிலான வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டது என்றும் ஆய்வாளர்கள், நிர்வாகிகள் மற்றும் கார்ப்பரேட் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

ADVERTISEMENT