அமீரகத்தில் வேலை தேடும் நபரா நீங்கள்..?? உங்களுக்கான அரிய வாய்ப்பு..!!
ஐக்கிய அரபு அமீரகத்தில் வேலை தேடும் நபரா நீங்கள். உங்களுக்கான ஒரு அற்புத வாய்ப்பு தற்பொழுது வந்துள்ளது.
துபாயில் உள்ள ஒரு பெரிய கூலிங் நிறுவனமானது இந்த வார இறுதியில் பல்வேறு பணிகளுக்கு ஆட்சேர்ப்பு செய்ய நேர்காணல்களை நடத்தவிருக்கின்றது.
இந்த நிறுவனமானது கன்ட்ரோல் மற்றும் இண்ஸ்ட்ருமென்டேஷன் டெக்னீசியன், ப்ளாண்ட் ஆபரேட்டர் / அஸிஸ்டென்ட் ப்ளாண்ட் ஆபரேட்டர்; RO ஆபரேட்டர்; HVAC டெக்னீசியன் / அஸிஸ்டென்ட் HVAC டெக்னீசியன், மெக்கானிக்கல் டெக்னீசியன் / அஸிஸ்டென்ட் மெக்கானிக்கல்டெக்னீசியன்; மற்றும் ஒரு எலக்ட்ரிகல் டெக்னீசியன் ஆகிய பணியிடங்களுக்கான நபர்களைத் தேர்ந்தெடுக்கவுள்ளது.
கூடுதலாக, அதன் செயல்பாடுகளை இயக்க பாதுகாப்பு காவலர்கள் (safety guards) மற்றும் உதவியாளர்கள் / துப்புரவாளர்களையும் தேர்ந்தெடுக்கும் என தெரிவித்துள்ளது.
இதற்காக நடத்தப்படவிருக்கும் நேர்முகத் தேர்வானது மே 29 சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை சத்வாவின் அல் மினா சாலையில் உள்ள ரமதா ஜுமேரா ஹோட்டலில் (Ramada Jumeirah hotel) நடைபெறும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வேலைகளுக்காக விண்ணப்பிக்கும் நபர்கள் தங்களது சமீபத்திய CV, பாஸ்போர்ட் அளவு புகைப்படம், பாஸ்போர்ட் நகல் / விசா நகல், எமிரேட்ஸ் ஐடி நகல் மற்றும் கல்வி மற்றும் அனுபவ சான்றிதழ்களின் நகல்களை கொண்டு வர வேண்டும்.
அத்துடன், நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ளும் நபர்கள் கோவிட் -19 தடுப்பூசி அட்டை அல்லது 48 மணிநேரத்திற்குள் எடுக்கப்பட்ட செல்லுபடியாகும் எதிர்மறை கோவிட் -19 PCR சோதனை சான்றிதழை எடுத்துச் செல்ல வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
காலியிடங்கள் மற்றும் அதற்கான தகுதிகள் பின்வருமாறு:
Technician (control and instrumentation): எலக்ட்ரானிக்ஸ் அல்லது இன்ஸ்ட்ருமென்டேஷன் இன்ஜினீயரிங்கில் டிப்ளமோ முடித்து DDC பேனல்கள், PLC, இன்டர்ஃபேஸ் யூனிட் மற்றும் இண்டக்ரேஷன் சிஸ்டத்தில் (interface units and integration system) 4 ஆண்டு அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
Plant Operator / Assistant Plant Operator: ஏர் கண்டிஷனிங்கில் டிப்ளோமா பெற்றிருக்க வேண்டும், chiller plant-ன் செயல்பாடுகளில் குறிப்பாக district cooling-இல் 5 ஆண்டு அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
RO Operator: பயன்பாட்டுத் துறையில் ரிவர்ஸ் ஆஸ்மோசிஸ் ப்ளாண்ட் நடவடிக்கைகளில் (reverse osmosis plant operations) 2 முதல் 3 ஆண்டு அனுபவம் கொண்ட கெமிக்கல் இன்ஜினியரில் டிப்ளோமா பெற்றவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.
HVAC technician / Assistant HVAC technician: ஏர் கண்டிஷனிங் டிப்ளோமா முடித்து, air cool recipe-compressor / screw chillers, centrifugal chillers மற்றும் அதனுடன் தொடர்புடைய உபகரணங்களை பராமரித்தல் மற்றும் மாற்றியமைத்தல் ஆகியவற்றில் 2 முதல் 3 ஆண்டு அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
Mechanical technician / Assistant mechanical technician: மெக்கானிக்கல் இன்ஜினியரிங் டிப்ளோமா படித்து கம்ப்ரசர்கள், பம்புகள் (pumps), வால்வுகள் (valves), FCU, AHU மற்றும் கூலிங் டவர் (cooling tower) ஆகியவற்றின் பராமரிப்பு மற்றும் பழுதுபார்க்கும் வேலைகளில் 2-3 ஆண்டு அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
Electrical Technician: இந்த வேலைக்கு மெக்கானிக்கல் / எலக்ட்ரிக்கல் / எலக்ட்ரானிக் இன்ஜினியரிங் அல்லது ஏர் கண்டிஷனிங் டிப்ளோமா படித்திருக்க வேண்டும். இது HVAC-ல் மீட்டர்களைப் பராமரிப்பதில் 5 ஆண்டு அனுபவம் மற்றும் district energy system அல்லது centrifugal / screw chiller plants பராமரிப்பு செயல்பாட்டில் குறைந்தபட்சம் 1 ஆண்டு அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.