ADVERTISEMENT

தொழில்நுட்ப கோளாறை சந்தித்த அமீரகத்தின் AlHosn app..!! NCEMA தகவல்..!!

Published: 17 Jun 2021, 1:35 PM |
Updated: 17 Jun 2021, 1:59 PM |
Posted By: admin

ஐக்கிய அரபு அமீரகத்தில் ஒரு நபரின் தடுப்பூசி மற்றும் PCR சோதனை முடிவுகளைத் தெரிந்து கொள்ள உதவும் அல் ஹோஸ்ன் அப்ளிகேஷன் (AlHosn) இன்று (வியாழக்கிழமை) நாட்டில் பல பயனர்களுக்கு தற்காலிகமாக செயல்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

தேசிய அவசர நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையம் (NCEMA) இந்த தொழில்நுட்ப செயலிழப்பை தீர்க்க முயற்சித்து வருவதாக கூறியுள்ளது.

புதிதாக தொடங்கப்பட்ட கிரீன் பாஸ் முறை மூலம் அபுதாபியில் பல பொது இடங்களை அணுக அல் ஹோஸ்ன் ஆப் பயன்படுத்தப்படுகிறது.

ADVERTISEMENT

கொரோனா பரவலை சரிசெய்யும் விதமாக பொது இடங்களில் கூடுதல் பாதுகாப்பை அளிக்க இந்த திட்டம் ஜூன் 15 முதல் நடைமுறைக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.