UAE: இனி உணவகங்கள், மால்கள், கடற்கரை என அனைத்து பொது இடங்களுக்கும் செல்ல Alhosn ‘கிரீன் பாஸ்’ கட்டாயம்..!! அபுதாபி அறிவிப்பு..!!
அபுதாபியில் இனி ‘கிரீன் பாஸ்’ வைத்திருப்பவர்கள் மட்டுமே பெரும்பாலான பொது இடங்களில் நுழைய அனுமதிக்கப்படுவார்கள் என்று தற்பொழுது அறிவிக்கப்பட்டுள்ளது.
அபுதாபி குடியிருப்பாளர்கள் ஷாப்பிங் மால்கள், பெரிய சூப்பர் மார்க்கெட்கள், ஜிம்கள், ஹோட்டல்கள், பொது பூங்காக்கள் மற்றும் கடற்கரைகள், தனியார் கடற்கரைகள் மற்றும் நீச்சல் குளங்கள், பொழுதுபோக்கு மையங்கள், சினிமாக்கள், அருங்காட்சியகங்கள், உணவகங்கள் மற்றும் கஃபேக்கள் ஆகியவற்றை அணுகுவதற்கு தங்கள் அல்ஹோஸ்ன் பயன்பாட்டில் கிரீன் பாஸ் வைத்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விதிமுறையானது ஜூன் 15 செவ்வாய்க்கிழமை முதல் நடைமுறைக்கு வரும் என கூறப்பட்டுள்ளது. மேலும், இந்த நடைமுறைகள் 16 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு பொருந்தும் என்று அபுதாபி அவசர, நெருக்கடி மற்றும் பேரழிவுக் குழு தெளிவுபடுத்தியுள்ளது.
குடியிருப்பாளர்களின் தடுப்பூசி நிலை மற்றும் PCR சோதனையின் அடிப்படையில் குறிப்பிட்ட நாட்களுக்கு கிரீன் பாஸ் ஆக்டிவேட்டில் இருக்கும்.
முழுமையாக தடுப்பூசி போட்டவர்கள்:
இவர்கள் குறைந்தது 28 நாட்களுக்கு முன்னதாகவே இரண்டாவது டோஸினைப் பெற்றவர்கள் அல்லது தடுப்பூசி சோதனைகளில் தன்னார்வலர்களாக இருப்பவர்கள். PCR சோதனையின் எதிர்மறை முடிவைப் பெற்று, அல்ஹோஸ்ன் அப்ளிகேஷனில் 30 நாட்களுக்கு கிரீன் பாஸ் மற்றும் ஏழு நாட்களுக்கு E அல்லது கோல்டன் ஸ்டார் ஐகானை தக்க வைத்துக் கொள்ளலாம்.
தடுப்பூசியின் இரண்டாவது டோஸைப் பெற்று 28 நாட்கள் பூர்த்தியடையாதவர்கள்:
PCR சோதனை மேற்கொண்டு எதிர்மறை முடிவைப் பெற்றால், அல்ஹோஸ்ன் அப்ளிகேஷனில் 14 நாட்களுக்கு கிரீன் பாஸ் இருக்கும்.
முதல் டோஸை மட்டுமே பெற்றவர்கள்:
இரண்டாவது டோஸ் போட காத்திருப்பவர்கள் PCR சோதனை முடிவின் மூலம் அல்ஹோஸ்ன் ஸ்டேட்டஸில் ஏழு நாட்களுக்கு கிரீன் பாஸ் பெறலாம்.
இரண்டாவது டோஸை தாமதமாக போடுபவர்கள்:
முதல் டோஸைப் பெற்று, இரண்டாவது டோஸ் பெற 48 நாட்கள் அல்லது அதற்கு மேல் இருந்தால், எதிர்மறையான PCR சோதனை முடிவால், அல்ஹோஸ்ன் ஸ்டேட்டஸ் மூன்று நாட்களுக்கு கிரீன் பாஸைப் பெறலாம்.
தடுப்பூசி எடுப்பதில் இருந்து விலக்கு பெற்றவர்கள்:
அங்கீகரிக்கப்பட்ட செயல்முறைகளின்படி தடுப்பூசி விலக்கு சான்றிதழ்கள் உள்ளவர்களுக்கு, எதிர்மறையான PCR சோதனை முடிவின் மூலம் அல்ஹோஸ்ன் ஸ்டேட்டஸ் ஏழு நாட்களுக்கு பச்சை நிறத்தில் தோன்றும்.
தடுப்பூசி போடாதவர்கள்:
PCR சோதனை முடிவுக்குப் பிறகு மூன்று நாட்களுக்கு அல்ஹோஸ்ன் நிலையில் கிரீன் பாஸைப் பெறுவார்கள்.
Abu Dhabi Emergency, Crisis and Disasters Committee has approved usage of green pass on Alhosn app, based on the emirate’s 4-pillar strategy to combat #Covid_19 focused on vaccination, active contract tracings, safe entry and adopting preventive measures. pic.twitter.com/Sbf9XG4SeL
— وزارة الداخلية (@moiuae) June 9, 2021