அமீரக செய்திகள்
துபாய் RTA-வில் பணிபுரிய விருப்பமா..?? உங்களுக்கான அரிய வாய்ப்பு..!!
துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) வரும் ஜூன் 11 வெள்ளிக்கிழமை முதல் டாக்ஸி ஓட்டுநர்களை நியமிக்க நேர்காணல்களை நடத்தவுள்ளதாக தெரிவித்துள்ளது.
ஐந்து நாள் நடைபெறவிருக்கும் நேர்காணல்கள் ஜூன் 11 முதல் ஜூன் 15 வரை மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை துபாயில் உள்ள முஹைஸ்னாவின் (muhaisnah) அம்மான் தெருவில் (Amman Street) அமைந்துள்ள துபாய் டாக்ஸி கார்ப்பரேஷன் கட்டிடத்தில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் வேலைக்கு விண்ணப்பிக்கும் நபர்களுக்கு இரண்டு முதல் ஐந்து ஆண்டுகள் அனுபவம் இருக்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
வேலைக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் தங்கள் CV.க்களை [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ அல்லது +971565151791 என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கோ அனுப்பலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.