ADVERTISEMENT

இந்த வருட ஈத் அல் அத்ஹாவிற்கான தேதியைக் கணித்த சர்வதேச வானிலை மையம்..!!

Published: 30 Jun 2021, 8:06 AM |
Updated: 30 Jun 2021, 8:12 AM |
Posted By: admin

வரும் ஜூலை 20, செவ்வாய்க்கிழமை, பெரும்பாலான இஸ்லாமிய நாடுகளில் ஈத் அல் அத்ஹாவின் முதல் நாளாக இருக்கக்கூடும் என்று சர்வதேச வானியல் மையம் அறிவித்துள்ளது.

ADVERTISEMENT

ஜூலை மாதம் 10 சனிக்கிழமையன்று ஐக்கிய அரபு அமீரக நேரப்படி காலை 05:17 மணிக்கு துல் ஹஜ் மாதம் தொடங்க வாய்ப்புள்ளது என்று சர்வதேச வானியல் மையத்தின் இயக்குநர் இன்ஜினீர் முஹம்மது ஷவ்கத் ஓதே கூறியுள்ளார்.

ADVERTISEMENT

அந்த நாளில் அரபு நாடுகளிலிருந்தும், ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பாவின் பெரும்பாலான பகுதிகளில் இருந்தும் பிறை பார்ப்பதைப் பொறுத்து இது உறுதிபடுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

 

ADVERTISEMENT