இந்தியாவில் இருந்து அமீரகம் பயணிக்க ஜூலை 6 வரை தடை நீட்டிப்பு..!! ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் தகவல்..!!
இந்தியாவில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்திற்கு ஜூன் 30 வரை தனது விமான சேவையினை இடைநிறுத்தம் செய்வதாக அமீரகத்தின் எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் சமீபத்தில் அறிவித்திருந்த நிலையில், அமீரக அரசு இந்தியாவில் இருந்து அமீரகத்திற்கு இயக்கப்படும் விமானங்களுக்கான தடையை ஜூலை 6 வரை நீட்டியுள்ளதாக ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் தெரிவித்துள்ளது.
இது குறித்து விமான நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், ஐக்கிய அரபு அமீரகத்தின் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் இடைநீக்கத்தை நீட்டித்துள்ளது என்தெரிவித்துள்ளது.
ஏற்கெனவே, விமான முன்பதிவு செய்தவர்கள் வரும் எதிர்கால தேதியில் டிக்கெட்டினை மாற்றியமைக்குமாறு பயணிகளுக்கு விமான நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.
இந்தியாவில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்திற்கு இயக்கப்படும் பயணிகள் விமான சேவையானது கடந்த ஏப்ரல் 24 ஆம் தேதி தடை செய்யப்பட்டது. பின்னர், இந்தியாவில் கொரோனாவின் இரண்டாம் அலையின் தீவிர தாக்கத்தால் இந்த தடையானது மறு அறிவிப்பு வரும் வரை நீட்டிக்கப்படுவதாக ஐக்கிய அரபு அமீரகத்தின் தேசிய அவசர நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையம் (NCEMA) தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Attention passengers to UAE!@IndembAbuDhabi @cgidubai pic.twitter.com/7W4ofvP9sf
— Air India Express (@FlyWithIX) June 8, 2021