அமீரக வேலைவாய்ப்பு: வங்கித்துறை வேலைக்காக நடைபெறும் நேர்முக தேர்வு..!! வெளிநாட்டில் இருப்பவர்களும் விண்ணப்பிக்கலாம்..!!
ஐக்கிய அரபு அமீரகத்தின் வங்கித்துறையில் வேலை செய்ய விரும்பும் நபர்களுக்கு தற்பொழுது காலியிடங்கள் அறிவிக்கப்பட்டு அதற்கான நேர்முகத்த தேர்வு நடக்கவிருப்பதாக கூறப்பட்டுள்ளது.
கிரெடிட் கார்டுகள் மற்றும் தனிநபர் கடன்களை (personal loans) விற்க நல்ல திறமையுள்ள நபர்களை நியமிக்க விற்பனை அதிகாரிகள் (sales officers) பதவிகளுக்கான நேர்முகத்தேர்வு நாளை (ஜூன் 3, 2021) அன்று அபுதாபியில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வேலைக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் சிறந்த தகவல் தொடர்பு திறன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நேரடி மற்றும் தொலைபேசி மூலமாகவும் விற்பனை அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களுக்கு நல்ல சம்பளம் மற்றும் சலுகைகள் வழங்கப்படும் என்றும், உடனடியாக பணிக்கு அமர்த்தப்படுவார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.
நேர்காணல்களுக்குச் செல்லும் நபர்கள், சமீபத்தில் புதுப்பிக்கப்பட்ட CV.யின் நகலைக் கொண்டு வர வேண்டும். விண்ணப்பிக்கும் நபர்கள் நாளை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை அலுவலக எண் 501, யுனைடட் அரப் பேங்க் கட்டிடம், கலீஃபா தெரு, அபுதாபி என்ற முகவரியை அடைந்து நேர்காணலை மேற்கொள்ளலாம்.
கிரெடிட் கார்டுகள் மற்றும் தனிநபர் கடன்களில் தொடர்புடைய வங்கி விற்பனை அனுபவம் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு வெளியே வசிக்கும் புதிதாக வேலை தேடும் நபர்களும் இந்த வேலைகளுக்கு பரிசீலிக்கப்படுவார்கள். அவர்கள் தங்கள் CV.க்களை [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு ஈமெயில் செய்யலாம் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.