தொழிலாளர்களுக்கு 5 மணி நேரத்திற்கும் மேலாக மதிய ஓய்வு இடைவேளை அறிவித்த கத்தார்..!! மீறும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை..!!
கத்தார் நாட்டின் நிர்வாக மேம்பாடு, தொழிலாளர் மற்றும் சமூக விவகாரங்கள் அமைச்சகம் கோடை காலம் ஆரம்பித்ததை முன்னிட்டு தொழிலாளர்களுக்கு மதிய இடைவேளையை அறிவித்துள்ளது. அதன்படி, ஜூன் 1 முதல் செப்டம்பர் 15 வரை சூரியனின் கீழ் நேரடியாக வேலை செய்பவர்களுக்கு மதிய நேரங்களில் தடை விதிக்கப்படுகிறது.
அமைச்சகம் தனது சமூக ஊடகங்களில் 2021 ஆம் ஆண்டிற்கான அமைச்சக முடிவு எண் (17) ன் படி, காலை 10 மணி முதல் பிற்பகல் 3:30 மணி வரை தொழிலாளர்கள் திறந்த வெளி அல்லது நேரடியாக சூரியனின் கீழ் வேலை செய்ய தடை செய்கிறது என அறிவித்துள்ளது.
இந்த முடிவின் நோக்கம் தொழிலாளர்களை அதிக வெப்பத்தால் ஏற்படும் ஆபத்துகளிலிருந்து பாதுகாப்பதாகும் என்று கூறப்பட்டுள்ளது.
மேலும், தொழிலாளர் அமைச்சகம் அனைத்து நிறுவனங்களும் இந்த விதியினை முறையாக கடைபிடிக்க வேண்டும் என்றும் மீறும் நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.