ADVERTISEMENT

அமீரகத்தின் பல பகுதிகளில் மணல்புயல் வீசும்..!! தேசிய வானிலை மையம் எச்சரிக்கை..!!

Published: 27 Jun 2021, 7:12 AM |
Updated: 27 Jun 2021, 7:17 AM |
Posted By: admin

ஐக்கிய அரபு அமீரகத்தின் பல பகுதிகளுக்கு இன்று (ஞாயிற்றுக்கிழமை) மணல் மற்றும் தூசுப்புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

அமீரகத்தில் இன்று தூசி மற்றும் மணல் புயல் வீசும் என்பதால் தேசிய வானிலை ஆய்வு மையம் குடியிருப்பாளர்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ADVERTISEMENT

40 கி.மீ வேகத்தில் வீசக்கூடிய காற்று காரணமாக, இது சில பகுதிகளில் கிடைமட்டத் தன்மையை 2,000 மீட்டருக்கும் குறைவாகக் குறைக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த எச்சரிக்கை காலை 8:30 மணி முதல் இரவு 7 மணி வரை இருக்கும் என்றும், மேலும் இந்த பகுதியில் உள்ளவர்கள் ஏதேனும் வெளிப்புற நடவடிக்கைகளுக்குச் சென்றால் கவனத்துடன் இருக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இந்த நேரத்தில் தெரிவுத்திறன் (visibility) குறைவாக இருப்பதால் ஓட்டுநர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று அபுதாபி காவல்துறை வலியுறுத்தியுள்ளது.

அதே போல், வாகனம் ஓட்டும்போது எந்தவொரு வீடியோவையும் அல்லது தொலைபேசியைப் பயன்படுத்துவதன் மூலமும் வாகன ஓட்டிகள் கவனத்தை திசைதிருப்ப வேண்டாம் என்றும் காவல்துறை எச்சரித்துள்ளது.