ADVERTISEMENT

UAE: இனி தடுப்பூசி போட்டவர்களுக்கே பொது இடங்களில் அனுமதி.. அபுதாபி பேரிடர் மேலாண்மைக்குழு ஒப்புதல்..!!

Published: 29 Jun 2021, 7:52 AM |
Updated: 29 Jun 2021, 8:01 AM |
Posted By: admin

ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அபுதாபியின் அவசர, நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மைக்குழு வரும் ஆகஸ்ட் 20 முதல் பொது இடங்களுக்குள் நுழைய தடுப்பூசி போடப்பட்டவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என அறிவித்துள்ளது.

ADVERTISEMENT

இந்த முடிவு கொரொனா தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கான அபுதாபியின் மூலோபாயத்திற்கு ஏற்ப அமைந்துள்ளது மற்றும் பொது சுகாதாரத்தைப் பாதுகாக்க எடுக்கப்பட்ட தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நிறைவு செய்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அபுதாபியில் தடுப்பூசி போட தகுதி வாய்ந்த நபர்களில் 93 சதவீதத்திற்கும் அதிகமானவர்களுக்கு தடுப்பூசி போட்ட பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இந்த முடிவு கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு உட்பட்ட பகுதிகளில் பாதுகாப்பை மேம்படுத்துவதாகவும், சமூக உறுப்பினர்களுக்கு மேம்பட்ட பாதுகாப்பையும் வழங்கும் என்றும் குழு கூறியது.

முதல் கட்டமாக ஷாப்பிங் சென்டர்கள், ரெஸ்டாரன்ட்கள், கஃபேக்கள் மற்றும் சூப்பர் மார்க்கெட்டுகள் மற்றும் மருந்தகங்கள் தவிர்தது ஷாப்பிங் சென்டருக்குள் இல்லாத அனைத்து சில்லறை விற்பனை நிலையங்களும் இதில் அடங்கும் என குழு ஒப்புதல் அளித்துள்ளது.

ADVERTISEMENT

இந்த முடிவின் முதல் கட்டத்தில் ஜிம்கள், பொழுதுபோக்கு வசதிகள் மற்றும் விளையாட்டு நடவடிக்கைகள், சுகாதார கிளப்புகள், ரிசார்ட்ஸ், அருங்காட்சியகங்கள், கலாச்சார மையங்கள் மற்றும் தீம் பார்க், அத்துடன் பல்கலைக்கழகங்கள், நிறுவனங்கள், பொது மற்றும் தனியார் பள்ளிகள் மற்றும் அபுதாபியில் உள்ள குழந்தைகள் நர்சரிகள் ஆகியவை அடங்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அங்கீகரிக்கப்பட்ட செயல்முறையின் மூலம் பெறப்பட்ட மற்றும் அல்ஹோஸ்ன் அப்ளிகேஷனில் பதிவுசெய்யப்பட்ட தடுப்பூசி போடுவதற்கு விலக்கு பெற்ற நபர்கள் மற்றும், 15 வயது மற்றும் அதற்கு கீழுள்ள குழந்தைகளுக்கு இந்த முடிவு பொருந்தாது என்று குழு கூறியுள்ளது.

மேலும் தொழில்துறை பகுதிகள் மற்றும் அடர்த்தியான மக்கள்தொகை நிறைந்த பகுதிகளில் முன்கூட்டியே சோதனை பிரச்சாரங்கள், தொற்றுநோயைக் கண்டறிய நவீன மற்றும் புதுமையான தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துதல் மற்றும் தற்போதைய தடுப்பூசி பிரச்சாரம் உள்ளிட்ட அபுதாபி மேற்கொள்ளும் செயல்திறன்மிக்க நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபடுவதன் முக்கியத்துவத்தையும், தடுப்பூசியைத் போடுவதன் முக்கியத்துவத்தையும், தடுப்பூசி மூலம் நிலையான மீட்புக்கு மிகவும் பயனுள்ள முறையாக இந்த குழு தொடர்ந்து அனைத்து நடைமுறைகளையும் நடவடிக்கைகளையும் மதிப்பீடு செய்கிறது எனவும் தெரிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.