குடும்பமாக வெளியே சாப்பிடுவதற்கு உண்டான கட்டுப்பாடுகளில் தளர்வு..!! அபுதாபி பேரிடர் குழு தகவல்..!!
அபுதாபியில் உள்ள அதிகாரிகள் உணவகங்கள் மற்றும் கஃபேக்கள் ஆகியவற்றில் ஒரே மேசையைப் பகிர்ந்து கொள்ளக்கூடிய குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கையில் உள்ள கட்டுப்பாடுகளை தளர்த்தியுள்ளனர்.
அதன்படி ஜூன் 5 முதல், ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் எனில் எத்தனை பேர் வேண்டுமானாலும் ஒரு மேஜையில் அமரலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அபுதாபியின் அவசரநிலை, நெருக்கடி மற்றும் பேரிடர் குழு தொற்றுநோயைக் கட்டுப்படுத்த நான்கு மாதங்களுக்கும் மேலாக இருந்த கட்டுப்பாடுகளை தளர்த்தி தற்பொழுது இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இருப்பினும், உணவகங்கள் மற்றும் கஃபேக்களில் ஒட்டுமொத்த திறனில் எந்த மாற்றமும் இல்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பேரிடர் குழு வெளியிட்ட அறிவிப்பில், “சமூகத்தில் உள்ள அனைவரின் ஆரோக்கியத்தையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்துவதற்கும் பொது சுகாதார ஆதாயங்களைப் பாதுகாப்பதற்கும் உணவகங்கள் மற்றும் கஃபேக்கள் ஆகியவை 60 சதவிகிதத் திறன் என்ற அடிப்படையில் இயங்க வேண்டும் மற்றும் பிற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பேண வேண்டும் என்பதன் முக்கியத்துவத்தை இந்த குழு மீண்டும் உறுதிப்படுத்துகிறது” என்று கூறியுள்ளது.
Abu Dhabi’s Emergency, Crisis & Disaster Committee allows members of the same family to sit at one table in restaurants and cafes, with no limit on numbers, while adhering to approved capacity of 60% and maintaining other precautionary measures, effective Saturday, 5 June 2021. pic.twitter.com/ZTkLzjtcUk
— مكتب أبوظبي الإعلامي (@admediaoffice) June 4, 2021