புர்ஜ் கலீஃபாவின் உச்சிப்பகுதி, துபாய் அக்வாரியம் போன்றவற்றைப் பார்வையிட 50% வரை தள்ளுபடி..!! டிக்கெட் பெறுவது எப்படி..??
அமீரகத்தில் கோடைகாலம் துவங்கிவிட்டதால் வெயிலானது வெளுத்து வாங்குகிறது. வார நாட்களிலேயே வேலைக்கு வெளியே செல்ல யோசிப்பவர்களுக்கு வார இறுதி நாட்களில் பொழுதுபோக்கிற்காக கூட வெளியே செல்ல முடியாத சூழலாக இருக்கின்றது.
இதனால், பெரும்பாலானோர் மால் செல்வது போன்ற உட்புற பொழுது போக்கு இடங்களுக்கு செல்லவே பெரிதும் விரும்புகின்றனர்.
இந்நிலையில், உலகப் புகழ்பெற்ற துபாய் மாலின் முக்கிய சுற்றுலாத்தலங்களுக்கு கோடைகாலத்தை முன்னிட்டு நீங்கள் நம்ப முடியாத அளவில் 50% தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் துபாய் அக்வாரியம் & அண்டர் வாட்டர் ஜூ மற்றும் புர்ஜ் கலீஃபாவின் உச்சிப் பகுதி ஆகியவை அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்காக நீங்கள் செய்ய வேண்டியது துபாய் மால் பிக் டிக்கெட் (Dubai Mall Big Ticket) பாஸைப் பெறுவதாகும். இதன் மூலம் புர்ஜ் கலீஃபா, ரீல் சினிமாஸ், துபாய் அகுவாரியம் மற்றும் அண்டர் வாட்டர் ஜூ, துபாய் ஐஸ் ரிங்க், கிட்ஜானியா மற்றும் வி.ஆர் பார்க் ஆகிய இடங்களை அணுகலாம்.
Dubai Aquarium & underwater Zoo – இங்கு 400 க்கும் மேற்பட்ட சுறாக்கள் மற்றும் 140 க்கும் மேற்பட்ட வகையான நீர்வாழ் விலங்குகள் உள்ளன.
At the top, Burj Khalifa – இது உலகின் மிக உயரமான கட்டிடத்தின் 124 மற்றும் 125 வது மாடியில் காணப்படும் பார்வை தளமாகும். இத்தளத்தில் இருந்து துபாய் நகரையே கண்டு களிக்கக் கூடிய அற்புத அனுபவத்தை இது தரும்.
மேலும் துபாய் ஐஸ் ரிங்க் (Dubai Ice Rink), ரீல் சினிமாஸ் (Reel cinemas), கிட்ஜானியா (KidZania) மற்றும் VR (விர்ச்சுவல் ரியாலிட்டி) பார்க் ஆகியவை குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் சரியான பொழுதுபோக்கு இடமாகும்.
இந்த தள்ளுபடி சலுகையானது ஜூலை 30, 2021 வரை மட்டுமே கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
துபாய் மாலில் இருக்கக்கூடிய பிரத்யேக POS பகுதிகளில் நீங்கள் துபாய் மால் பிக் டிக்கெட்டை வாங்கலாம். இது கோஸ்டா காபிக்கு (Costa Coffee) எதிரே தரை தளத்திலும் சினிமா நுழைவாயிலில் 7 ஆம் மட்டத்திலும் (cinema entrance, level 7) உள்ளது.