ADVERTISEMENT

துபாய்: புகைப்படம் எடுப்பதில் ஆர்வமுள்ளவரா நீங்கள்.?? 10,000 திர்ஹம் பரிசாக வெல்ல வாயப்பளிக்கும் RTA..!!

Published: 23 Jun 2021, 6:05 AM |
Updated: 23 Jun 2021, 6:15 AM |
Posted By: admin

புகைப்படம் எடுப்பதில் ஆர்வமுள்ளவர்களுக்கு துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) ஒரு அற்புத வாய்ப்பை அளிக்கிறது.

ADVERTISEMENT

RTA அறிவித்துள்ள போட்டியில் கலந்து கொண்டு துபாயை அழகிய முறையில் சிறந்த புகைப்படம் எடுப்பவர்கள் 10,000 திர்ஹம் வரை வெல்லும் வாய்ப்பைப் பெறலாம். போட்டியில் வென்ற பங்கேற்பாளர்களுக்கு 45,000 திர்ஹம் மதிப்புள்ள ரொக்கப் பரிசுகள் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

துபாயில் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துவதை ஊக்குவிக்கும் நோக்கில், அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த புகைப்பட போட்டி ஹம்தான் பின் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் சர்வதேச புகைப்பட விருது (Hipa) உடன் இணைந்து நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

“புகைப்படம் எடுப்பதில் ஆர்வமுள்ளவர்கள் இந்த போட்டியில் கலந்து கொள்ளுமாறு நாங்கள் அழைக்கிறோம். இந்த போட்டிக்காக அறிவிக்கப்பட்டிருக்கும் மூன்று கருப்பொருள்களின் (themes) கீழ் போட்டியாளர்கள் புகைப்படம் எடுக்க வேண்டும். அவை ‘கலை மற்றும் கட்டிடக்கலை’, ‘பொதுப் போக்குவரத்து’, ‘எமிராட்டி கலாச்சாரம் மற்றும் வாழ்க்கை முறை’” என்று ஹிப்பாவின் பொதுச்செயலாளர் அலி கலீஃபா பின் தலித் கூறியுள்ளார்.

முதல் கருப்பொருளான, ‘கலை மற்றும் கட்டிடக்கலை’ (art and architecture), துபாய் முழுவதும் உள்ள சிறந்த கட்டிடங்கள், உள்கட்டமைப்பு, அற்புதமான இடங்கள், தெருக் கலைகளின் (street art) அழகைக் காட்டுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

ADVERTISEMENT

‘பொதுப் போக்குவரத்து (public transport)’  மெட்ரோ, டிராம், ஃபெர்ரி, ஆப்ரா, டாக்சிகள் மற்றும் பேருந்துகளை உள்ளடக்கியது.

மூன்றாவது கருப்பொருள், ‘எமிராட்டி கலாச்சாரம் மற்றும் வாழ்க்கை முறை (emirati’s culture and lifestyle), இடங்கள், நிகழ்வுகள், அமீரக கலாச்சாரம் போன்றவற்றை உள்ளடக்கியது.

போட்டியில் கலந்து கொள்வது எப்படி?

ஜூன் 27 முதல் மூன்று வாரங்கள் வரை இயங்கும் இந்த போட்டியில் அமீரக குடியிருப்பாளர்கள், சுற்றுலாவாசிகள் என புகைப்படம் எடுப்பதில் ஆர்வமுள்ள அனைவரும் கலந்து கொள்ளலாம்.

பங்கேற்பாளர்கள் குறைந்தபட்சம் மூன்று புகைப்படங்களை ஹிபாவின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான (http://www.hipa.ae) என்ற வலைதளத்தில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இதில் போட்டியின் ஒவ்வொரு கருப்பொருளுக்கும் குறைந்தது ஒரு புகைப்படம் சமர்ப்பிக்க வேண்டும்.

இந்த போட்டியில் வென்ற முதல், இரண்டாம் மற்றும் மூன்றாவது வெற்றியாளர்களுக்கு முறையே 10,000, 7,000 மற்றும் 3,000 திர்ஹம் ரொக்கப் பரிசுகள் வழங்கப்படும்.

கூடுதலாக, 25 தகுதி வாய்ந்த வெற்றியாளர்களுக்கு தலா 1,000 திர்ஹம் கொண்ட 25 நோல் கார்டுகள் (nol cards) விநியோகிக்கப்படும்.

பரிசுகளுடன் கூடுதலாக, போட்டியில் வென்றவர்கள் தங்கள் புகைப்படங்களை RTA நோல் கார்டில் அச்சிடுவதற்கான வாய்ப்பைப் பெறுவார்கள் என்று பின் தலித் கூறியுள்ளார்.

RTA-வின் கார்ப்பரேட் நிர்வாக ஆதரவு துறையின் தலைமை நிர்வாக அதிகாரி யூசிப் அல் ரெட்ஹா கூறுகையில் “பொது போக்குவரத்து என்பது எந்தவொரு நகரத்திலும் அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாகும். துபாயில் எங்களிடம் பலவிதமான போக்குவரத்து நெட்வொர்க் உள்ளது, இது துபாயில் வசிப்பவர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கு அன்றாட வாழ்க்கையில் போக்குவரத்திற்கு பெரிதும் உதவுகிறது. இந்த போட்டியைத் தொடங்குவதன் மூலம், பல்வேறு போக்குவரத்து வழிகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதையும், இந்த வழிகளை சுமுகமாகவும் எளிதாகவும் பயன்படுத்த பல்வேறு சேவைகள் கிடைக்கின்றன என்பதைக் குறித்த விழிப்புணர்வை உண்டாக்குவதையும் நோக்கமாக கொண்டுள்ளோம்”

“RTA-வின் நோல் கார்டுகள் துபாயில் உள்ள பொதுப் போக்குவரத்து பயனர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளன, சர்வதேச சிறந்த நடைமுறைகளைப் பின்பற்றி அவர்களின் தனித்துவமான வாடிக்கையாளர் பயண அனுபவத்தை வழங்குவதன் மூலம் அவர்களின் பயணத்தை எளிதாகவும் மகிழ்ச்சிகரமாகவும் இது மாற்றுகிறது” என்று அவர் கூறியுள்ளார்.