ADVERTISEMENT

UAE: சினோஃபார்ம் இரு டோஸினையும் போட்டுக்கொண்டவர்கள் தற்பொழுது ஃபைசர் தடுப்பூசியைப் பெறலாம்..!! அனுமதி அளித்த அபுதாபி

Published: 4 Jun 2021, 4:36 AM |
Updated: 4 Jun 2021, 4:39 AM |
Posted By: admin

அபுதாபியில் கொரோனாவிற்கான தடுப்பூசியில் இரண்டு டோஸினைப் போட்டுக்கொண்டவர்கள் இப்போது முன்னர் பெற்ற தடுப்பூசி வகையை விடுத்து வேறு கோவிட் -19 தடுப்பூசி வகையை எடுத்துக்கொள்ள விருப்பம் அளிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு நபர் ஒன்றுக்கும் மேற்பட்ட கொரோனாவிற்கான தடுப்பூசி வகைகளை கலந்து போட்டுக்கொள்ள அனுமதி அளிப்பது அபுதாபியில் இதுவே முதன் முறையாகும்.

ADVERTISEMENT

கடந்த ஆண்டு இறுதியில் சினோஃபார்ம் தடுப்பூசி வெகுஜன பயன்பாட்டிற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டாலும், அபுதாபி இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில்தான் ஃபைசர்-பயோஎன்டெக் தடுப்பூசிக்கு ஒப்புதல் அளித்தது. இந்நிலையில், சினோஃபார்ம் தடுப்பூசியின் இரண்டு டோஸைப் பெற்றவர்களில் விருப்பமுள்ளவர்கள் முபதாலா சுகாதார தடுப்பூசி மையத்தில் (Mubadala Health vaccination centre) ஃபைசர்-பயோஎன்டெக் தடுப்பூசியை தற்பொழுது போட்டுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் பஹ்ரைன் ஆகியவை ஆரம்பத்தில் சினோபார்ம் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு ஃபைசர்-பயோஎன்டெக் தடுப்பூசியை “Booster Shot” ஆக கிடைக்கச் செய்துள்ளன.

ADVERTISEMENT

அபுதாபியில், இரண்டாவது டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்ட மூன்று மாதங்களுக்குப் பிறகு பூஸ்டர் தடுப்பூசி கிடைக்கிறது என்று முபதலா சுகாதார தடுப்பூசி மையத்தின் பிரதிநிதி தெரிவித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையில், முபதாலா சுகாதார தடுப்பூசி மையத்தின் கால் சென்டர் நிர்வாகி, இந்த தடுப்பூசி அப்பாய்மெண்ட் மூலமாகவும், மருத்துவரிடமிருந்து கையொப்பமிடப்பட்ட ஒப்புதல் படிவத்தை அளிப்பதன் மூலமாகவும் மட்டுமே போடப்படுகிறது என்று கூறியுள்ளார்.

ADVERTISEMENT

இந்த மையங்களில் இரண்டு ஒப்புதல் படிவங்கள் இலவசமாகக் கிடைக்கின்றன. ஒன்று விண்ணப்பதாரரால் நிரப்பப்பட வேண்டும், மற்றொன்று மருத்துவரால் நிரப்பப்பட வேண்டும். இரண்டு படிவங்களும் ‘முன்னர் பெறப்பட்ட தடுப்பூசி வகையை விட, வெவ்வேறு கோவிட் -19 தடுப்பூசி வகையை எடுக்க ஒப்புதல்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

“நீங்கள் இதற்கு முன்பு சினோபார்ம் தடுப்பூசியின் இரண்டு டோஸினை நிறைவு செய்து, பின் நீங்கள் ஃபைசர் தடுப்பூசியை எடுக்க விரும்பினால், ஒரு அப்பாய்மெண்டை பதிவு செய்ய வேண்டும். பின்னர் இரண்டு படிவங்களில் ஒரு படிவத்தை நீங்கள் நிரப்ப வேண்டும். மற்றொரு படிவத்தை ஒரு பொது மருத்துவரிடம் எடுத்துச் சென்று அதில் அவர் கையொப்பமிட வேண்டும். இந்த இரண்டு படிவங்களையும் உங்கள் அப்பாய்மெண்ட் தேதியன்று நீங்கள் கொண்டு வர வேண்டும். மேலும், சினோபார்மின் இரண்டாவது டோஸுக்கு மூன்று மாதங்களுக்குப் பிறகு நீங்கள் ஃபைசர் தடுப்பூசியை எடுத்துக் கொள்ளலாம்” என்று ஊழியர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

மருத்துவரின் பங்களிப்பு:

படிவத்தின்படி, ஒரு மருத்துவர் விண்ணப்பதாரரின் முந்தைய தடுப்பூசி டோஸ்களின் தேதிகளை சரிபார்க்க வேண்டும். ஃபைசர்-பயோஎன்டெக் தடுப்பூசியை போட்டுக்கொள்வதால் ஏற்படும் பொதுவான பக்க விளைவுகள் குறித்து மருத்துவர் விண்ணப்பதாரரிடம் சொல்ல வேண்டும். பின்னர் தடுப்பூசி போட விரும்புபவரின் மருத்துவ உடல் தகுதியை (medical fitness) மதிப்பிட்ட பிறகு, மருத்துவர் படிவத்தில் கையெழுத்திட்டு ஃபைசர்-பயோஎன்டெக் தடுப்பூசி பெற அனுமதி வழங்கலாம்.

தடுப்பூசி போடுவதற்கான அப்பாய்மெண்டை பதிவு செய்ய மக்கள் 8004959 என்ற எண்ணை அழைக்கலாம் அல்லது MCV@telemed.ae க்கு மின்னஞ்சல் செய்யலாம்.