ADVERTISEMENT

ஈத் அல் அத்ஹா: 2800 வண்ண விளக்குகளால் ஜொலிக்கும் அபுதாபி..!!

Published: 18 Jul 2021, 7:46 AM |
Updated: 18 Jul 2021, 7:46 AM |
Posted By: admin

ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அபுதாபியில் ஒவ்வொரு ஈத் நிகழ்வின் போதும் அபுதாபி முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு காண்போரைக் கவரும் வகையில் சாலைகள், தெருக்கள் மிகப் பிரகாசமாக ஜொலித்துக் கொண்டிருக்கும்.

ADVERTISEMENT

அது போலவே, தற்பொழுதும் வரவிருக்கும் ஈத் அல் அத்ஹாவிற்காக அபுதாபி சிட்டி மற்றும் புறநகர்ப்பகுதிகளில் சுமார் 2,800 ஒளிரும் வண்ண விளக்குகளை அபதாபி முனிசிபாலிட்டி நிறுவியுள்ளது.

ஐக்கிய அரபு அமீரக பாரம்பரியத்தை சிறப்பிக்கும் வண்ணத்துப்பூச்சிகள், கப்பல்கள், ஈத் வாழ்த்து போன்றவற்றைக் குறிப்பிடும் வகையில் அபுதாபி வண்ண விளக்குகளால் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

அபுதாபி குடியிருப்பாளர்கள் மற்றும் பார்வையாளர்களுக்கு மிகவும் பிடித்த இடமான கார்னிச்சில் இவற்றில் மிகவும் சிறந்த அலங்காரங்களைக் காணலாம்.