ADVERTISEMENT

அமீரக வேலைவாய்ப்பு: 7,000 திர்ஹம் வரை சம்பளம்..!! வங்கித்துறை, FMCG நிறுவனத்தில் பணிபுரிய நடத்தப்படும் நேர்முகத் தேர்வு..!!

Published: 5 Jul 2021, 7:45 AM |
Updated: 5 Jul 2021, 7:50 AM |
Posted By: admin

ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா தாக்கத்திற்குப் பிறகு பொருளாதாரம் மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பி வருவதால், நிறுவனங்கள் தங்கள் செயல்பாடுகளை விரிவுபடுத்தும்போது அதிகமானவர்களைச் சேர்ப்பதற்காக நேர்காணல்களை ஏற்பாடு செய்து வருகின்றன.

ADVERTISEMENT

இந்த வாரம், வங்கியில் தனிநபர் கடன்கள் மற்றும் கிரெடிட் கார்டுகளுக்கான சேல்ஸ் எக்ஸிக்யூடிவ்களை நியமிக்கவும் ஒரு FMCG நிறுவனத்திற்கு தொழில்நுட்ப ஊழியர்களை நியமிக்கவும் நேர்காணல்கள் நடைபெறுகின்றன.

ஐக்கிய அரபு அமீரகத்தில் 1 முதல் 2 ஆண்டுகள் தனிநபர் கடன் விற்பனை அனுபவம் (personal loan sales experience) உள்ளவர்கள் வங்கி வேலைகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

ADVERTISEMENT

விண்ணப்பிக்கும் நபர்கள் வேலையில் கொடுக்கப்படும் இலக்குகளை சந்திக்க ஆர்வமுள்ளவராகவும் தன்னம்பிக்கை உடையவராகவும் இருக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

இந்த வேலைக்கு தேர்ந்தெடுக்கப்படும் நபர்களுக்கு 7,000 திர்ஹம் சம்பளம் மற்றும் பிற கவர்ச்சிகரமான சலுகைகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

உள்ளூர் சந்தை அனுபவத்துடன் கிரெடிட் கார்டு விற்பனை நிர்வாகிகளையும் வங்கி பணியமர்த்துகிறது.

இருப்பினும், உடனடியாக வங்கியில் சேரக்கூடிய விண்ணப்பதாரர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

தனிநபர் கடன் மற்றும் கிரெடிட் கார்டு விற்பனை நிர்வாகிகளின் (sales executive) வேலைகளுக்கான நேர்காணல்கள் ஜூலை 7 ஆம் தேதி வரை மொயாட்டிவ் எம்ப்ளாய்மெண்ட் செர்விசஸ் (Moativ Employment Services), மசூத் டவர் 2 (Masaood Tower 2), அல் ஃபுட்டெய்ம் ஆட்டோமால் அருகில் (next to Al Futtaim Automall), போர்ட் சயீத் (Port Saeed), தேரா (Deira), துபாய் (Dubai) என்ற இடத்தில் நடத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே போல் முன்னணி FMCG நிறுவனமான யூனிகாய் ஃபுட்ஸ் (Unikai foods) வேன் விற்பனையாளர் மற்றும் இயந்திர மற்றும் UHD தொழில்நுட்ப வல்லுநர்களை நியமிக்க நேர்முகத் தேர்வுகளை நடத்தி வருகிறது. இதில் தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு, கவர்ச்சிகரமான சம்பளத்துடன் தங்குமிடம் மற்றும் போக்குவரத்து ஆகியவற்றையும் வழங்குவதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதில் இரண்டு முதல் ஐந்து ஆண்டுகள் அனுபவம் உள்ளவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம். துபாயில் ஜூலை 8 வரை நேர்காணல் நடைபெறும் என கூறப்பட்டுள்ளது.

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம் :

  • யூனிகாய் ஃபுட்ஸ் (unikai foods),
  • அல் கூஸ் -1 (Al qouz-1),
  • அல் மேடான் ஸ்ட்ரீட் (Al meydan street)
  • துபாய் பவுலிங் சென்டர் அருகில் (near to dubai bowling center)
  • துபாய்