ஐக்கிய அரபு அமீரகத்தில் ஈத் நிகழ்வை முன்னிட்டு பல்வேறு தள்ளுபடி விற்பனைகள் அமீரகமெங்கும் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
அதில் 250 க்கும் மேற்பட்ட பிராண்டுகளின் பொருட்களை தள்ளுபடி விலையில் ஒரே இடத்தில் வழங்குகிறது CBBC.
துபாயில் உள்ள உலக வர்த்தக மையத்தில் (Dubai World Trade Center) ஈத் அல் அத்ஹாவிற்கான மிகப் பெரிய தள்ளுபடி விற்பனையை தொடங்கியுள்ளது CBBC. இந்த விற்பனை ஜூலை 15 முதல் 24 வரை DWTC அரங்குகள் 5 மற்றும் 6-ல் காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை நடைபெறுகிறது.
இங்கு நுகர்வோர்கள் 250 க்கும் மேற்பட்ட பிராண்டுகளில் சூப்பர் ப்ரொமோஷன்களையும் தள்ளுபடியையும் பெறலாம்.
கான்செப்ட் பிராண்ட்ஸ் குழுமத்தின் நிறுவனர் மற்றும் தலைவர் விஜய் சம்யானி இது குறித்து கூறுகையில், “ஈத் அனைவருக்கும் மிகவும் சிறப்பு வாய்ந்த நிகழ்வாகும். மக்களுக்கு ஷாப்பிங் செய்ய பல்வேறு வகையான பிராண்டுகளை வழங்குவதன் மூலம் இந்நிகழ்வை இன்னும் சிறப்பானதாக மாற்றுவதை நாங்கள் நோக்கமாகக் கொண்டுள்ளோம். அனைத்து பிராண்டுகளுக்கும் 80 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படும் என்று கூறுவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
Lacoste, Fila, Mont Blanc, Splash, Lifestyle, Gant, Tom Ford, Marwa, Disney, La Senza மற்றும் இது போன்ற 250க்கும் மேற்பட்ட பிராண்டுகளை ஒரே இடத்தில் தள்ளுபடி விலையில் கிடைக்கச் செய்வதால் CBBC ஷாப்பிங் செய்வதற்கு உகந்த இடமாகும்.