ADVERTISEMENT

அபுதாபியில் அமலுக்கு வரும் இயக்கத் தடை..!! புதிய நுழைவு விதிமுறைகளும் அறிவிப்பு..!!

Published: 15 Jul 2021, 11:23 PM |
Updated: 16 Jul 2021, 2:40 AM |
Posted By: admin

அபுதாபியில் உள்ள அவசர, நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மைக்குழு அதிகாரிகள் கொரோனாவிற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் விதிமுறைகளை புதுப்பித்து புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

ADVERTISEMENT

புதிய அறிவிப்பின் கீழ், நள்ளிரவு முதல் அதிகாலை வரை பொதுமக்களுக்கு இயக்கக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன், அபுதாபி நுழைய புதிய விதிமுறைகள், மால்கள், சினிமாக்கள் மற்றும் பிற பொது இடங்களில் அனுமதிக்கப்பட்டிருக்கும் மக்களின் திறன் உள்ளிட்ட கட்டுப்பாடுகளும் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன

அபுதாபி அவசர, நெருக்கடி மற்றும் பேரழிவுக் குழு அறிவித்துள்ள இந்த புதிய விதிமுறைகள் ஜூலை 19 திங்கள் முதல் நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது புதிய வகை கொரோனா பரவுவதைத் தடுக்கவும் தொடர்ச்சியான சோதனையை உறுதிப்படுத்தவும் உதவும் என்று கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இயக்க கட்டுப்பாடு

ஜூலை 19 திங்கள் தொடங்கி, சுத்திகரிப்பு திட்டமானது மீண்டும் ஐக்கிய அரபு அமீரகத் தலைநகரான அபுதாபியில் நடைமுறைக்கு வரவுள்ளது.

அதனையொட்டி, தினமும் நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 5 மணி வரை சுத்திகரிப்பு மேற்கொள்ளப்படும். இந்த நேரங்களில், போக்குவரத்து மற்றும் பொது மக்களின் நடமாட்டம் தடைசெய்யப்படும் மற்றும் போக்குவரத்து சேவைகள் இருக்காது.

ADVERTISEMENT

மிகவும் அத்தியாவசியமான தேவை, உணவு அல்லது மருந்துப் பொருட்களைப் பெறுதல் ஆகிய காரணங்களைத் தவிர்த்து பொதுமக்கள்  அனைவரும் வெளியில் செல்லாமல் வீட்டிலேயே இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் வெளியே செல்ல விரும்பும் குடியிருப்பாளர்கள் www.adpolice.gov.ae என்ற இணையதளம் வழியாக இயக்க அனுமதிக்கு விண்ணப்பிக்கலாம்.

புதிய நுழைவு விதிமுறைகள்

எதிர்மறை PCR சோதனை முடிவைப் பெற்ற 48 மணி நேரத்திற்குள் அல்லது எதிர்மறை DPI சோதனை முடிவைப் பெற்ற 24 மணி நேரத்திற்குள் அமீரகத்தின் மற்ற பகுதிகளில் இருந்து அபுதாபிக்குள் நுழைய குடியிருப்பாளர்களுக்கு அனுமதி வழங்கப்படும்.

எதிர்மறை PCR முடிவுடன் அபுதாபியில் நுழைபவர்கள் அபுதாபியில் தொடர்ந்து தங்கினால் அபுதாபியில் நுழைந்த நான்காவது மற்றும் எட்டாவது நாட்களில் PCR சோதனை எடுக்க வேண்டும். DPI சோதனை முடிவுடன் அபுதாபி நுழைபவர்கள் அபுதாபியில் தொடர்ந்து தங்கினால் மூன்றாவது மற்றும் ஏழாவது நாட்களில் PCR சோதனை எடுக்க வேண்டும்.

அதேபோல், DPI சோதனையை தொடர்ச்சியாக அடுத்தடுத்து அபுதாபியில் நுழைய பயன்படுத்த முடியாது.

இந்த புதிய நடைமுறைகளானது தடுப்பூசி போடப்பட்ட மற்றும் தடுப்பூசி போடப்படாத அனைத்து குடிமக்களுக்கும் குடியிருப்பாளர்களுக்கும் பொருந்தும்.

மக்கள் திறன்

அபுதாபியின் கடற்கரைகள், பூங்காக்கள் மற்றும் நீச்சல் குளங்கள், உணவகங்கள் மற்றும் கஃபேக்கள், ஜிம்கள் மற்றும் ஹோட்டல்களில் உள்ள ஸ்பாக்கள் மற்றும் பேருந்துகள் மற்றும் ஃபெர்ரிஸ் ஆகியவை 50 சதவீத மக்கள் திறனிலேயே இயக்கப்பட வேண்டும்.

ஷாப்பிங் மால்கள் 40 சதவீத திறனிலும், திரையரங்குகள் 30 சதவீதத்திலும் செயல்பட உள்ளன.

அத்துடன், ஐந்து பயணிகள் செல்வதற்கான டாக்ஸயில் அதிகபட்சம் மூன்று பயணிகளும், ஏழு நபர்கள் செல்வதற்கான டாக்ஸிகளில் அதிகபட்சம் நான்கு பயணிகள் மட்டுமே பயணம் செய்யலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.