ADVERTISEMENT

UAE: 4 ஆண்டுகள் கடந்த பைக்கினை பயன்படுத்தக் கூடாது.. 100கிமீ வேகத்தை தாண்டக்கூடாது.. டெலிவரி சேவைகளுக்கு விதிக்கப்பட்ட புதிய விதிமுறைகள்..!!

Published: 13 Jul 2021, 4:26 AM |
Updated: 13 Jul 2021, 10:59 AM |
Posted By: admin

துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) டெலிவரி சேவையில் ஈடுபடும் ஊழியர்களுக்கு புதிய வழிகாட்டுதல்களை அறிவித்துள்ளது. சமூகத்திற்கு பாதுகாப்பை அளிக்கும் வகையில் அறிவிக்கப்பட்டுள்ள இந்த புதிய வழிமுறைகளை பின்பற்றத் தவறினால் அபராதம் விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

புதிய வழிகாட்டுதல்கள்

  • துபாயில் டெலிவரி சேவையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு 100 கி.மீ வேக வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • மோட்டார் சைக்கிளை ஓட்டும் ஊழியர்கள் இடது பாதையைப் (left lane) பயன்படுத்தக்கூடாது மற்றும் டெலிவரி செய்வதற்கு பேக்குகளைப் பயன்படுத்தக்கூடாது
  • அத்துடன் மற்றொரு நபரை பைக்கில் ஏற்றிச் செல்லவும் அவர்களுக்கு அனுமதி இல்லை.
  • ஊழியர்கள் சான்றளிக்கப்பட்ட பாதுகாப்பு ஹெல்மெட் (certified protective helmet) அணிய வேண்டும் மற்றும் பைக்குகளை நிறுத்த அங்கீகரிக்கப்பட்ட இடங்களைப் பயன்படுத்த வேண்டும்.
  • மேலும் அவர்கள் காவல்துறையிடம் இருந்து நல்ல நடத்தைக்கான சான்றிதழைப் பெற வேண்டும்.
  • டெலிவரி சேவையில் ஈடுபடும் ஊழியர்கள் 21 வயதுக்கு குறைவானவராகவோ அல்லது 55 வயதுக்கு மேற்பட்டவராகவோ இருக்கக்கூடாது.
  • அவர்கள் பயன்படுத்தும் மோட்டார் சைக்கிள்கள் உற்பத்தி செய்யப்பட்ட நாளிலிருந்து நான்கு ஆண்டுகளுக்கு மேல் இருக்கக்கூடாது.

இந்த வழிகாட்டுதல்கள் துபாயில் டெலிவரி சேவைகளை நிர்வகிக்கும் ஒரு விரிவான கையேட்டில் பட்டியலிடப்பட்டுள்ளன.

ஊழியர்கள் இடது பாதையைப் பயன்படுத்தினால் 700 திர்ஹம் வரை அபராதம் விதிக்கப்படும் மற்றும் மூன்றாவது முறையாக மீறல் புரிந்தால் இடைநீக்கம் செய்யப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

அத்துடன் டெலிவரிக்கு உபயோகிக்கும் பைக்கை வேறு நோக்கத்திற்கு பயன்படுத்தினால் 4,000 திர்ஹம் அபராதம் மற்றும் 100 கி.மீ வேக வரம்பை கடைபிடிக்கத் தவறினால் நிறுவனங்களுக்கு 2,000 திர்ஹம் அபராதம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உணவு பாதுகாப்பு

  • உணவானது பூச்சிகள், தூசி, புகை, சூரிய ஒளி, மழை அல்லது பிற காரணிகளை வெளிப்படுத்துவதன் மூலம் மாசுபடுவதைத் தடுக்கும் வகையில் சேமிக்கப்பட வேண்டும். 
  • பெட்டியின் வெளி மற்றும் உள் பாகங்கள் மற்றும் கைகளால் தொடப்படும் பகுதிகள் துபாய் முனிசிபாலிடியால் அங்கீகரிக்கப்பட்ட கிருமிநாசினிகளைப் பயன்படுத்தி உணவு ஏற்றுவதற்கு முன் சுத்தம் செய்யப்பட்டு முழுமையாக கிருமி நீக்கம் செய்யப்பட வேண்டும்.
  • தொடர்ச்சியான வெப்பநிலைக் கட்டுப்பாட்டைப் பராமரிக்கவும், உணவுத் தரத்தை பராமரிக்கவும் பொருத்தமான வெப்ப பாதுகாப்பு கருவிகளில் உணவு வழங்கப்பட வேண்டும்.

துபாய் காவல்துறை மற்றும் நகராட்சியுடன் ஒருங்கிணைந்து உருவாக்கப்பட்டுள்ள இந்த கையேடு, விநியோக சேவைகளை வழங்கும் அனைத்து வர்த்தக நிறுவனங்களையும் உள்ளடக்கியது என குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இதில் உணவுகள், பொருட்கள் மற்றும் உபகரணங்கள் வழங்கல் ஆகியவை அடங்கும்.

டெலிவரி சேவை நிறுவனங்களும் அவற்றின் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களும் “ஓட்டுநர்கள், சாலை பயன்படுத்துபவர்கள் மற்றும் வழங்கப்பட வேண்டிய உணவு அல்லது பொருட்களின் பாதுகாப்பிற்காக” வழிகாட்டுதல்களை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்று RTA தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.