ஐக்கிய அரபு அமீரகத்தில் அடுத்த வாரம் வரவிருக்கும் ஈத் அல் அத்ஹா விடுமுறை நாட்களை கொண்டாடும் வகையில், துபாயில் உள்ள உலகின் மிக உயர்ந்த கட்டிடடமான புர்ஜ் கலீஃபா ஈத் முபாரக் வாழ்த்துக்களுடன் கூடிய சிறப்பு LED கண்காட்சியை தனது உலகின் மிக பெரிய திரையில் காட்சிப்படுத்த இருப்பதாக அறிவித்துள்ளது.
அதன்படி, வரும் ஜூலை 20 முதல் 24 ஆம் தேதி வரையிலான விடுமுறை நாட்களில் தினமும் இரவு 8 மணி முதல் ‘ஈத் முபாரக்’ அனிமேஷன்கள் ஒளிபரப்பப்படும் என்று கூறியுள்ளது.
மேலும் அந்த நாட்களில் ஈத் சிறப்பை குறிக்கும் வகையிலான சிறப்பு LED நிகழ்ச்சிகளும் இரவு 7.45 மணி முதல் இரவு 10.45 மணி வரை ஒவ்வொரு 30 நிமிடங்களுக்கு ஒருமுறை அதன் மிக நீண்ட திரையில் பொதுமக்களின் பார்வைக்காக காட்சிப்படுத்தப்படும் என்றும் புர்ஜ் கலீஃபா தெரிவித்துள்ளது.
இது தவிர, டவுன்டவுன் துபாயில் இருக்கும் மிகப்பெரிய நீரூற்றான ‘துபாய் ஃபவுண்டைன்’ பார்வையாளர்களுக்காக விடுமுறை நாட்களில் ஒவ்வொரு மணி நேரமும், அதே வேளையில் மாலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை ஒவ்வொரு 30 நிமிடங்களுக்கு ஒரு முறையிலும் காட்சிப்படுத்தப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளது.
அமீரகத்தில் அடுத்த வாரம் கொண்டாடவிருக்கும் இந்த வருட ஈத் அல் அத்ஹா விடுமுறைக்காக அமீரகத்தில் உள்ள தனியார் மற்றும் அரசு ஊழியர்களுக்கு ஆறு நாட்கள் நீண்ட விடுமுறையை அமீரக அரசு ஏற்கனவே அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
தனியார் துறை ஊழியர்களுக்கு ஈத் அல் அத்ஹா விடுமுறை நாட்களை அறிவித்த அமீரகம்..!!