ADVERTISEMENT

தனியார் துறை ஊழியர்களுக்கு ஈத் அல் அத்ஹா விடுமுறை நாட்களை அறிவித்த அமீரகம்..!!

Published: 11 Jul 2021, 9:53 PM |
Updated: 12 Jul 2021, 2:13 AM |
Posted By: admin

ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள மனிதவள மற்றும் எமிரேடிசேஷன் அமைச்சகம் தனியார் துறை ஊழியர்களுக்கு ஈத் அல் அத்ஹா விடுமுறை நாட்களை அறிவித்துள்ளது.

ADVERTISEMENT

அரசுத்துறை ஊழியர்களுக்கு வழங்கப்பட்டதைப் போன்றே தனியார் துறை ஊழியர்களுக்கும் நான்கு நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, ஜூலை 19 ஆம் தேதி தொடங்கி ஜூலை 22 வியாழக்கிழமை வரை ஈத் விடுமுறை நாட்கள் குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

அதனைத் தொடர்ந்து வார இறுதி நாட்கள் வருவதால், சனிக்கிழமை விடுமுறையாக இருக்கும் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு 6 நாட்கள் விடுமுறையும் சனிக்கிழமை வேலை நாளாக இருக்கும் நிறுவனங்களின் ஊழியர்களுக்கு 5 நாட்கள் விடுமுறையும் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.