ஐக்கிய அரபு அமீரகத்தின் அரசு மனித வளங்களுக்கான ஃபெடரல் ஆணையம் அமைச்சகங்கள் மற்றும் அரசு நிறுவனங்களில் பணிபுரியும் அரசுத்துறை ஊழியர்களுக்கு ஈத் அல் அத்ஹா விடுமுறை நாட்களை அறிவித்துள்ளது.
இஸ்லாமிய நாட்காட்டியின்படி துல் ஹஜ் மாதம் 9 இலிருந்து துவங்கி துல் ஹஜ் மாதம் 12 வரை ஈத் விடுமுறை நாட்கள் இருக்கும் என்று ஆணையம் அறிவித்துள்ளது.
அதன்படி ஜூலை 19 திங்கட்கிழமை முதல் ஜூலை 22 வியாழக்கிழமை வரை என நான்கு நாட்கள் பொதுத்துறை ஊழியர்களுக்கு ஈத் விடுமுறை நாட்கள் ஆகும்.
அதனைத்தொடர்ந்து வார விடுமுறை நாட்களான வெள்ளி மற்றும் சனிக்கிழமை வருவதால் ஊழியர்கள் ஆறு நாட்கள் நீண்ட விடுமுறையை இம்முறை பெறுவார்கள் என கூறப்பட்டுள்ளது.
மேலும், ஜூலை 25 ஞாயிற்றுக்கிழமை முதல் ஊழியர்கள் பணிக்குத் திரும்பலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசுத்துறை ஊழியர்களுக்குப் போன்றே தனியார் துறை ஊழியர்களுக்கும் கடந்த ஒரு சில வருடங்களாக பொது விடுமுறை அளிக்கப்பட்டு வருவதால் அவர்களுக்கும் நான்கு நாட்கள் விடுமுறை அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் இது குறித்த அறிவிப்பையும் அமீரக அரசு விரைவில் வெளியிடும் என கூறப்படுகிறது.