ADVERTISEMENT

UAE: எடிசலாட் வழங்கும் அதிரடி சலுகை..!! ஸ்மார்ட் டிவி, மொபைல், லேப்டாப்பிற்கு 65% வரை தள்ளுபடி..!!

Published: 2 Jul 2021, 3:00 AM |
Updated: 2 Jul 2021, 4:04 AM |
Posted By: admin

துபாய் சம்மர் சர்ப்ரைசஸ் (DSS) இன் ஒரு பங்குதாரரான, எடிசலாட் இந்த கோடைகாலத்தில் வாடிக்கையாளர்கள் தங்களுக்கு அல்லது தங்கள் அன்புக்குரியவர்களுக்கு பரிசுகளை வழங்குவதற்காக பல்வேறு வகையான சாதனங்கள் மற்றும் உபகரணங்களில் 65 சதவீதம் வரை தள்ளுபடியை வழங்குகிறது.

ADVERTISEMENT

வாடிக்கையாளர்கள் ஸ்மார்ட்போன்கள், டேப்லெட்டுகள், மடிக்கணினிகள், ஸ்மார்ட் டிவிகள் மற்றும் பிரபலமான பிராண்டுகளான சாம்சங், ஹவாய், சியோமி, சோனி மற்றும் போஸ் போன்றவற்றிலிருந்து தள்ளுபடியை பெற முடியும்.

அதே போல், 500 திர்ஹமிற்கும் அதிகமான விலையுள்ளவைகளுக்கு 24 மாதங்கள் வரையிலான ஸ்மார்ட்பே விருப்பங்கள் (Smartpay option) மற்றும் ஆன்லைனில் ஆர்டர் செய்பவர்களுக்கு இலவசமாக டெலிவரி போன்றவையும் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இந்த சாதனங்களை www.etisalat.ae, My Etisalat அப்ளிகேஷன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள எடிசலாட் சில்லறை விற்பனைக் கடைகள் வழியாக ஜூலை 1 முதல் செப்டம்பர் 4, 2021 வரை வாங்குபவர்களுக்கு தள்ளுபடி அளிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

துபாய் ஃபெஸ்டிவல் அண்ட் ரீடைல் நிறுவனங்களால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள DSS-ன் 24 வது பதிப்பு ஜூலை 1 முதல் செப்டம்பர் 4 வரை என 10 வாரங்களில் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT