ADVERTISEMENT

அமீரகத்தில் ஆகஸ்ட் மாதத்திற்கான பெட்ரோல், டீசல் விலை அறிவிப்பு..!!

Published: 29 Jul 2021, 8:21 AM |
Updated: 29 Jul 2021, 8:24 AM |
Posted By: admin

ஐக்கிய அரபு அமீரகத்தின் எரிபொருள் விலைக் குழு ஆகஸ்ட் மாதத்திற்கான எரிபொருள் விலைப்பட்டியலை அறிவித்துள்ளது. ஜூலை மாதத்தினை ஒப்பிடுகையில் ஆகஸ்ட் மாதத்தில் விலையானது சற்று அதிகரிப்பதாக இக்குழு தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

ஆகஸ்ட் மாதத்திற்கான எரிபொருள் விலை பின்வருமாறு:

  • சூப்பர் 98 : தற்பொழுது ஒரு லிட்டருக்கு 2.47 திர்ஹம் என விற்கப்படும் நிலையில் ஆகஸ்ட் மாதத்தில் ஒரு லிட்டருக்கு 2.58 திர்ஹமாக சற்று உயர்த்தப்பட்டுள்ளது.
  • ஸ்பெஷல் 95 : தற்பொழுது ஒரு லிட்டருக்கு 2.35 திர்ஹம் என விற்கப்படும் நிலையில் ஆகஸ்ட் மாதத்தில் ஒரு லிட்டருக்கு 2.47 திர்ஹமாக சற்று உயர்த்தப்பட்டுள்ளது
  • டீசல் : ஜூலை மாதத்தில் 2.42 திர்ஹமாக விற்கப்படும் நிலையில் ஆகஸ்ட் மாதம் முதல் லிட்டருக்கு 2.45 திர்ஹமாக உயர்த்தப்பட்டுள்ளது.

பிப்ரவரி 2021 வரை, கச்சா எண்ணெய் விலை அதிகரித்த போதிலும், தொடர்ந்து 11 மாதங்களாக ஐக்கிய அரபு அமீரகத்தில் எரிபொருள் விலைகள் மாறாமல் இருந்தன. இந்நிலையில் கடந்த மார்ச் மாதத்தில் இருந்து  எரிபொருள் விலையானது ஒவ்வொரு மாதமும் உயர்த்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

 

ADVERTISEMENT