ADVERTISEMENT

துபாய் சம்மர் பற்றிய சிறந்த வீடியோ எடுப்பவருக்கு 100,000 திர்ஹம்ஸ் பரிசுத்தொகை வெல்லும் வாய்ப்பு..!!

Published: 28 Jul 2021, 1:54 PM |
Updated: 28 Jul 2021, 2:03 PM |
Posted By: admin

துபாயில் கோடை காலத்தை முன்னிட்டு துபாய் சம்மர் சர்ப்ரைஸ் (DSS) கடந்த சில தினங்களுக்கு முன்பாக துவங்கப்பட்டது.

ADVERTISEMENT

பல தரப்பட்ட பொழுதுபோக்கு நிகழ்வுகள், ஷாப்பிங் ஆஃபர்கள், ப்ரொமோஷன்கள் என வழங்கப்பட்டு வரும் நிலையில் தற்பொழுது அதன் ஒரு பகுதியாக கோடைகாலத்தில் துபாயின் சிறப்பை வீடியோவாக எடுப்பவர்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட நபருக்கு 1,00,000 திர்ஹம்ஸ் பரிசுத் தொகை கிடைக்கவுள்ளது.

இதன்படி குடியிருப்பாளர்கள் கோடைகாலத்தில் துபாயின் சிறப்பு குறித்த வீடியோ ஒன்றை எடுத்து இன்ஸ்டாகிராமில் பகிர வேண்டும்.

ADVERTISEMENT

இன்ஸ்டாகிராமில் குறிப்பாக ‘Dubai Summer Story’ என்ற கருப்பொருளின் (theme) கீழ் உருவாக்கப்பட்ட இந்த HD வீடியோக்கள் 30 வினாடிகள் முதல் ஒரு நிமிடம் வரை நீளமாக இருக்கலாம் என்றும் உணவு, ஷாப்பிங், ஹோட்டல், குடும்ப வேடிக்கை மற்றும் நகர அளவிலான இடங்கள் ஆகியவற்றில் மூன்று செயல்பாடுகளை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

#DubaiSummerStory ஐப் பயன்படுத்தி @dsssocial என்ற டேக்குடன் வீடியோக்களை Instagram இல் பதிவேற்றலாம்.

ADVERTISEMENT

இந்த போட்டியில் கலந்து கொள்வதற்கான கடைசி தேதி ஆகஸ்ட் 24 ஆகும்.

போட்டியில் பங்கேற்கும் நபர்கள் தங்கள் வீடியோக்களானது ஐக்கிய அரபு அமீரகத்தின் கலாச்சார மற்றும் சமூக மரபுகளை மதிக்க வேண்டும். மேலும் மது பானங்கள் அல்லது ஷிஷாவைக் காண்பிப்பதைத் தவிர்க்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்த ஆண்டின் DSS செப்டம்பர் 4 வரை நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.