ADVERTISEMENT

இந்தியா-அமீரகம் பயணிகள் கவனத்திற்கு.. ஒரு எமிரேட் விசா வைத்திருந்து மற்றொரு எமிரேட் பயணிக்க திட்டமா..?? கவனம் மக்களே..!!

Published: 8 Aug 2021, 11:24 AM |
Updated: 8 Aug 2021, 11:31 AM |
Posted By: admin

பயணத்தடையால் இந்தியாவில் சிக்கித்தவித்த அமீரக குடியிருப்பாளர்கள் தற்பொழுது அமீரகம் திரும்பி வருகின்றனர். இவர்களில் எந்த எமிரேட் ரெசிடென்ஸி விசா வைத்துள்ளார்களோ அந்த எமிரேட் செல்லும் விமானத்தில் தான் பயணிக்க வேண்டும் என ஏர் இந்தியா அறிவித்துள்ளது.

ADVERTISEMENT

அதாவது துபாய் குடியிருப்பாளர்கள் துபாய் செல்லும் விமானத்தில் மட்டுமே பயணிக்க வேண்டும். அதேபோல், அபுதாபி குடியிருப்பாளர்கள் அபுதாபி செல்லும் விமானத்தில் மட்டுமே அமீரகம் திரும்ப வேண்டும்.

துபாய் குடியுரிமை விசா வைத்திருப்பவர்களுக்கான புதிய விதிமுறைகளில், “தற்போது துபாய் குடியுரிமை விசா மற்றும் GDRFA ஒப்புதல் பெற்ற பயணிகள் மட்டுமே துபாய் விமான நிலையத்திற்கு வர அனுமதிக்கப்படுகிறார்கள் என்பதை தயவுசெய்து கவனிக்கவும். பிற எமிரேட்ஸ் குடியுரிமை விசா உள்ள பயணிகள் துபாய் விமான நிலையத்திற்குள் வர அனுமதிக்கப்படவில்லை” என கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

பிற எமிரேட் ரெசிடென்சி விசா வைத்திருப்பவர்களுக்கான புதுப்பிப்பு பற்றி கூறுகையில், “அபுதாபி குடியுரிமை விசா மற்றும் ICA ஒப்புதல் பெற்ற பயணிகள் மட்டுமே அபுதாபி விமான நிலையத்திற்கு வர அனுமதிக்கப்படுகிறார்கள். துபாய் ரெசிடென்ஸி விசா உள்ள பயணிகள் அபுதாபி விமான நிலையத்திற்குள் வர அனுமதிக்கப்படவில்லை” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏர் இந்தியா மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸின் அபுதாபி அலுவலகமும் இந்த புதிய தகவலை உறுதிப்படுத்தியுள்ளன.

ADVERTISEMENT